முகப்புகோலிவுட்

“இதுவே கடைசியாக இருக்கட்டும்” திரைப் பிரபலங்கள் அஞ்சலி..! #RIPSujith

  | October 29, 2019 11:41 IST
Ripsujith

துனுக்குகள்

 • சுஜித்தின் உடலுக்கு நடிகர் விமல் நேரில் சென்று அஞ்சலி செலுத்துனார்
 • யோகி பாபு, ரோபோ ஷங்கர் உள்ளிட்டோர் ட்விட்டரில் வருத்தம் தெரிவித்தனர்.
 • சுஜித்தின் இழப்பே கடைசியாக இருக்கட்டும் - தயாரிப்பாளர் S.R. பிரபு
திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது சமூக வலைதள பக்கத்தில், ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த 2 வயது குழந்தை சுஜித்தின் மரணத்திற்கு வருத்தமும், குழந்தையின் குடும்பத்துக்கு ஆறுதலும் தெரிவித்து வருகின்றனர்.

'பிகில்' பட தயாரிப்பாளர் அர்சனா கல்பாத்தி, 'கைதி' பட தயாரிப்பாளர் S.R.பிரபு, நடிகர் யோகி பாபு, ரோபோ ஷங்கர், அருண்ராஜா காமராஜ், இசையமைப்பாளர் D.இமான் போன்ற பலரும் குழந்தை சுஜித்திற்கு தங்களது அஞ்சலியை சமூகவைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

பதிவுகளில் பலரும் இது போன்ற ஒரு துயரமான நிகழ்வு இனி நடக்ககூடாது என்றும் சுஜித்தே இதில் கடைசியாக இருக்கவேண்டும் என்றும் கூறியுள்ளனர். மேலும், மூடப்படாத ஆழ்துளை கிணறு அமைந்திருக்கும் நில உறிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கையும், தண்டனையும் வழங்கப்பட வேண்டும் என்றும் இது போன்ற சமயங்களில் தேவைப்படும் தொழில்நுட்பங்கள் மற்றும் உபகரணங்களையும் அரசு வாங்கி வைத்திருக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், நடிகர் விமல் குழந்தை சுஜித்தின் உடல் நல்லடக்கம் செய்த இடத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
 

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com