முகப்புகோலிவுட்

பா.ஜ.க.வில் இணைந்த பிரபல நடிகை..!! பொன்.ராதா டுவீட்..!

  | November 06, 2019 17:03 IST
Bjp

துனுக்குகள்

 • ஜெயலக்ஷ்மி வேட்டைக்காரன், முத்துக்கு முத்தாக போன்ற படங்களில் நடித்துள்ளர்
 • நடிகை ஜெயலக்ஷ்மி வழக்கறிஞரும் ஆவார்.
 • தற்போது கேளடி கண்மனி, முல்லும் மலரும் சீரியல்களில் நடித்துவருகிறார்.
திரைப்படம் மற்றும் சீரியல் நடிகையான ஜெயலக்ஷ்மி பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.

கேரளாவைச் சேர்ந்த நடிகை ஜெயலக்ஷ்மி வழக்கறிஞர் மற்றும் சமூக செயற்பாட்டாளருமாவார். பிரிவோம் சந்திப்போம் எனும் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான இவர், கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக, விசாரணை, குற்றம் 23, அப்பா, தப்புத் தண்டா, வேட்டைக்காரன், நோட்டா, அலைபேசி ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

மேலும், கேளடி கண்மனி எனும் சன் டிவி நாடகத்தின் மூலம் சின்னத்திறைக்கு அறிமுகமான இவர், விஜய் தொலைக்காட்சில் ஒளிபரப்பான தமிழ் கடவுள் முருகன் எனும் ஆன்மீக தொடரிலும் நடித்துள்ளார். தற்போது, சன் மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கல்யான பரிசு மற்றும் முல்லும் மலரும் சீரியல்களில் நடித்து வருகிறார்.
இவர் தற்போது, தேசிய அரசியல் கட்சியான பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.  இந்த செய்தியை, மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார். அவரின் அந்த ட்விட்டர் பதிவில் “திரைப்பட மற்றும் சின்னத்திரை நடிகையும்,வழக்கறிஞருமான ஜெயலக்ஷ்மி அவர்கள் இன்று தன்னை @BJP4TamilNadu இனைத்துக் கொண்டார். பிரதமர் திரு @narendramodi அவர்களின் ஆட்சி மற்றும் அவரது திட்டங்கள் மீதான ஈர்ப்பு தன்னை பாஜகவில் இணைத்துக் கொள்ள காரணம் என தெரிவித்தார்” என பதிவிட்டிருந்தார்.
 

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com