முகப்புகோலிவுட்

கமல் ஹாசனுடன் ரவி வர்மன்! வைரலாகும் ‘வேட்டையாடு விளையாடு’ த்ரோபேக் புகைப்படங்கள்!!

  | August 03, 2020 12:56 IST
Vettaiyaadu Vilaiyaadu

கமல் ஹாசனுடன் வரவிருக்கும் ‘இந்தியன்2’ படத்திற்கும் ஒப்பந்தமாகி, பின்னர் சில காரணங்களால் அப்படத்தில் தொடரமுடியாமல் போனது.

பிரபல ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் கடந்த 20 ஆண்டு காலமாக தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு மற்றும் ஆங்கிலம் என பல மொழிகளில் பல படங்களில் பணியாற்றியுள்ளார்.

23ivnj98

கோலிவுட்டில் சுசி கனேசன் இயக்கத்தில் 2002-ஆம் ஆண்டு வெளியான ‘ஃபைவ் ஸ்டார்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் ரவி வர்மன். அதையடுத்து ஆட்டோகிராஃப், அன்னியன், வேட்டையாடு விளையாடு, தசாவதாரம், வில்லு, காற்று வெளியிடை ஆகிய படங்களில் பணியாற்றியுள்ளார். தற்போது மணி ரத்னத்தின் பிரம்மாண்ட திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் தனது பங்கினை அளித்துவருகிறார்.
 

3rsrvca

ரவி வர்மன் சமீப நாடகளில் ‘photo of the day' என பல நிணைவு புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுவருகிறார். அவைகளில் ‘உலக நாயகன்' கமல் ஹாசன் மற்றும் கவுதம் வாசுதேவ் மேனனுடன் பணிபுரிந்த ‘வேட்டையாடு விளையாடு' படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை த்ரோபேக் செய்துள்ளார். இதுவரை வெளிவராத இந்த அரிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகிவருகின்றன.
 

vrkj5jjg

மேலும் பர்ஃபி, அன்னியன், வில்லு, மிஷன் மங்கல் என பல படங்களின் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் வெளியிட்டுவருகிறார்.
 

jdrvqi

அவர் கமல் ஹாசனுடன் தசாவதாரம் படத்திலும் பணியாற்றியிருந்தார். மேலும் வரவிருக்கும் ‘இந்தியன்2' படத்திற்கும் ஒப்பந்தமாகி, பின்னர் சில காரணங்களால் அப்படத்தில் தொடரமுடியாமல் போனது.
 

rmudhq1g
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com