முகப்புகோலிவுட்

அந்தப் படத்தின் ரீமேக்கில் நயன்தாராவா?

  | April 03, 2018 11:50 IST
Nayanthara Pari Remake

துனுக்குகள்

  • கடந்த மார்ச் 2-ஆம் தேதி வெளியான படம் ‘பரி’
  • இப்படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது
  • தமிழ் வெர்ஷனில் நயன்தாரா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது
பாலிவுட்டில் அனுஷ்கா ஷர்மா நடிப்பில் கடந்த மார்ச் 2-ஆம் தேதி வெளியான படம் ‘பரி’. ப்ரோசித் ராய் இயக்கியிருந்த இதில் முக்கிய வேடங்களில் பரம்ரதா சட்டர்ஜி, ரஜத் கபூர் ஆகியோர் நடித்திருந்தனர்.

சூப்பர் நேச்சுரல் ஹாரர் ஜானரைக் கொண்ட இப்படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை வருகிற ஏப்ரல் 19-ஆம் தேதி ரஷ்யாவில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

படத்தை தமிழில் ரீமேக்க முன்னணி தயாரிப்பு நிறுவனம் ஆர்வம் காட்டி வருவதாக தகவல் கசிந்தது. மேலும், தமிழ் வெர்ஷனில் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிக்கவுள்ளதாக கோலிவுட்டில் தண்டோரா போடப்படுகிறது. தற்போது, இது குறித்து நம்பத்தகுந்த வட்டாரங்களில் விசாரித்தபோது “பரவி வரும் இச்செய்தி வதந்தியே” என்று தெவித்துள்ளனர்.
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com