முகப்புகோலிவுட்

வடிவேலு பற்றி மனம் திறந்த காமெடி நடிகர் போண்டா மணி

  | February 04, 2019 11:26 IST
Vadivelu

துனுக்குகள்

  • நடிகர் வடிவேலுடன் பல படங்கள் நடித்திருக்கிறார்
  • இவர் இலங்கையை சேர்ந்தவர்,இயர் பெயர் கேதீஸ்வரன்
  • கின்னஸ் புத்தகத்தில் இவர் பெயர் இடம் பெற்றுள்ளது
இலங்கையில் இருந்து அகதியாக வந்தவர், காமெடி நடிகர் போண்டா மணி. தமிழில் 200க்கம் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.  காமெடி நடிகர் வடிவேலுடன் இணைந்து இவர் நடித்த பல்வேறு நகைச்சுவை இன்னும் சமூக வலைதளங்களில் மீம்ஸ்களாக உலாவிக் கொண்டிருக்கின்றன.
 
இவரது இயர் பெயர் கேதீஸ்வரன். ஆனால் போண்டா மணி என்றால்தான் அனைவருக்கும் தெரியும். சினிமாவில் அனைவராலும் எளிதில் அறியப்பட வேண்டும் என்பதற்காக  இவரின் பெயரை போண்டா மணி என்று மாற்றியவர் இயக்குநர் ஜெயசுந்தர். 
 
1996ம் ஆண்டு சாப்பாட்டுப் பெயர் உள்ளவர்கள் பட்டியலில் இவரது பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருப்பது குறிப்படத்தக்கது.  சமீப காலமாக இவரை திரையில் பார்க்கவே முடியவில்லை. வடிவேலு எப்போது திரையில் வருவது குறைந்ததோ, அப்போதிலிருந்து இவர்களை போன்ற துணை நடிகர்களுக்கு வாய்ப்பு குறைந்து போயிருக்கிறது என்பது மறுக்க முடியாக உண்மை. தனியார் பத்திரிகை ஒன்றிற்கு இது குறித்து பேட்டி அளித்துள்ள அவர்,
“ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்திருந்தாலும் அண்ணன் வடிவேலுடன் சேர்ந்து நடித்த போதுதான் மக்கள் மத்தியில்  என்னை போன்ற கலைஞர்கள் தெரியவே ஆரம்பித்தார்கள்.
 
அவர் இப்போது படங்களில் நடிக்காததால் எங்களை போன்ற துணை நடிகர்களுக்கு பட வாய்ப்பு மிகவும் அரிதாக உள்ளது.  சின்ன பட்ஜெட் படங்கள்தான் இப்போது சோறு போடுகிறது.
 
இப்போது சோனியா அகர்வால் நடிக்கும், ‘தனிமை', வி.சி.குகநாதன் இயக்கும் ‘தேன் நிலவுல மனைவியை காணோம்', ‘உன்னை காதலிப்பது சரியா தவறா', உள்ளிட்ட படங்கள் கைவசம் உள்ளது என்று தெரிவித்திருக்கிறார்.
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்