முகப்புகோலிவுட்

பிரபல நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி காலமானார்!

  | October 08, 2019 09:34 IST
Comedy Actor

துனுக்குகள்

 • குமுளியில் நடந்த படப்பிடிப்பின் போது மாரடைப்பு ஏற்பட்டு காலமானார் இவர்
 • இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி இவர் உயிர் இழந்தார்
 • இவர் நாயகன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார் இவர்

விஜயகாந்த் நடிப்பில் வெளியான தவசி படத்தில் வடிவேலுவுடன் இணைந்து "இந்த அட்ரஸ் எங்க இருக்கு" என்று கேட்கும் மன நல பாதிக்கப்பட்டவர் கதாப்பாத்திரம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் கிருஷ்ண மூர்த்தி. 

இதனைத் தொடர்ந்து 'நான் கடவுள்', நான் உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில் தேனி மாவட்டம் குமுளியில் படப்பிடிப்பில் இருந்த கிருஷ்ணமூர்த்திக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து இன்று காலை 4.30 மணியளவில் கிருஷ்ணமூர்த்தி உயிரிழந்தார். இவர் கமல் நடிப்பில் வெளியான 'நாயகன்' படத்தின் மூலம தமிழ் சினிமாவிற்கு நடிகராக தமிழ் அறிமுகமாகியது குறிப்பிடத்தக்கது.

இவருடைய இழப்பு தமிழ் சினிமா ரசிகர்கள் உட்பட திரையுலகினர் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பல்வேறு திரை பிரபலங்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
 

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com