முகப்புகோலிவுட்

“11-வருஷமா லாக்டவுன்”ல இருக்கும் பரோட்டா சூரி..! வைரலாகும் Corona Day-11 வீடியோ..!

  | April 06, 2020 11:50 IST
Parotta Soori

நாடு தழுவிய இந்த ஊரடங்கில், அவர் தினசரி போடும் ஒவ்வொரு வீடியோவும் ரசிகர்களைக் கவர்ந்துவருகிறது. 

கொரோனா வைரஸின் பரவலைக் குறைக்க, 21 நாள் பூட்டுதல் நாடு முழுவதும் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஷாப்பிங் மால்கள், ஜிம்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்களுடன், தியேட்டர்களும் நாடு முழுவதும் மூடப்பட்டுள்ளன. படப்பிடிப்புகளும் ரத்தான நிலையில், பிரபலங்கள் தங்களின் நேரத்தைச் சமைப்பது, உடற்பயிற்சி செய்வது, பாடுவது, ஆடுவது என தங்களுக்கு பிடித்த செயல்களை செய்வதன் மூலம் உபயோகமாகச் செலவழிக்கிறார்கள். அதனை தங்களது சமூக வலைத்தள பக்கத்திலும் பதிவேற்றம் செய்து தனது ரசிகர்களுடன் தொடர்பிலேயே இருக்கின்றனர்.

அந்த வகையில், பிரபல காமெடி நடிகர் இந்த கொரோனா பூட்டுதல் நாட்களில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழக்கையை அனுபவித்து வருகிறார். அவர் தொடர்ந்து 11-வது நாளாக இன்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் பல சுவாரஸ்யமான ‘Corona day-11' வீடியோவை வெளியிட்டுவருகிறார்.

தன் பிள்ளைகளுடன் ஜாலியாக வீட்டில் மகிழ்ச்சியாக வாழ்ந்துவரும் நம்ம சூரி அண்ணன், தாத்தா, பாட்டி-னு நம்ம சொந்த பந்தங்களை எல்லாம் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டுமென மக்களுக்கு கூறுகிறார். அவர் அந்த வீட்யோவில், தனது வீட்டில் உள்ள போட்டோ பிரேம்களிலும், தனது திருமண புகைப்பட ஆல்பத்தையும் எடுத்து தன் பிள்ளைகளுக்கு காட்டி மகிழ்ந்துள்ளார். அப்போது, தன் மனைவியிடம் கிண்டலாக பேசிய அவர் தன் கல்யாண வாழக்கையை “11 வருஷமா லாக்டவுன் தான்” என காமெடியாகக் கூறினார். அவர் தினசரி போடும் ஒவ்வொரு வீடியோவும் ரசிகர்களைக் கவர்ந்துவருகிறது.  


    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com