முகப்புகோலிவுட்

“தண்ணீர் தேவைபடுகிறவர்கள் இதைப் பேசுங்கள்” நகைச்சுவை நடிகர் சதீஷ்

  | May 29, 2019 17:27 IST
Sathish

துனுக்குகள்

  • தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக இருப்பவர் சதீஷ்
  • மிஸ்டர் லோக்கல் படத்தில் இவர் நடித்திருக்கிறார்
  • டெடி படத்தில் இவர் நடித்திருக்கிறார்
மனிதனின் அடிப்படைத் தேவை உணவும் தண்ணீரும். ஒவ்வொரு கோடை விடுமுறையிலும் தண்ணீர் பஞ்சம் ஆண்டாண்டுக்கு அதிகரித்துக்கொண்டிருப்பதை நாம் பார்க்க முடிகிறது.
 
தண்ணீர் பற்றாக்குறை சென்னை மட்டுமல்லாமல் கிராமங்கள் தோறும்கூட பல மையில் தூரம் சென்று எடுத்து வரும் நிலை இன்று உருவாகி இருக்கிறது.
 
அரசுதரப்பில் இருந்து தண்ணீர் சேமிப்பது குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தினாலும் அது மக்களிடம் போய் சரியாக சேர்வதில்லை என்பதுதான் நிதர்சனம்.
 
தண்ணீரின் தேவையை அறிந்து நகைச்சுவை நடிகர் சதீஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு சிறிய வீடியோ ஒன்றை பதிவிட்டிருக்கிறார். அதில் மிக எளிமையான இரண்டு விஷயங்கள் மூலம் நாம் எப்படி தண்ணீரை சேமிக்க முடியும் என்று கூறியிருக்கிறார். அதில்,
 
“அனைவருக்கும் வணக்கம். தமிழ்நாட்டில் இன்றைக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்னை தண்ணீர் பிரச்னை. குடிக்க தண்ணீர் இல்லை, குளிக்க தண்ணீர் இல்லை. இந்த பிரச்னையை சரிசெய்ய என்ன செய்யலாம். சேமிப்பு நிச்சயமாக நாம் அதை செய்ய மாட்டோம். மழை வரும் போது அதை ரசித்துவிட்டு கடலில் கலந்துவிடட்டும் என்று கடந்து விடுவோம். ஆகையால் இருக்கின்ற நீரை சின்ன சின்ன விஷயங்கள் செய்து சேமித்து வைக்க சில வற்றை கூறுகிறேன்.
 
ஷவரில் யாரும் குளிக்க வேண்டாம் அதில் அதிக அளவில் நீர் வீணாகிறது. குழாய்களில் கை கழுவும் போது முழுவதுமாக குழாய்களை திறந்து வைதுது கழுவ வேண்டாம். மெலிதாக தண்ணீர் வருவது போல் வைத்து கை கழுவலாம். இதைக் கேட்கும் போது இதெல்லாம் ஒரு விஷயமா என்று கூட  தோனலாம் ஆனால் இது போன்ற விஷயங்களில் தண்ணீர் அதிகம் விரையம் ஆகிறது. அந்த நீரை நாம் சேமிக்கலாம்.
 
இந்த விஷயம் லைக்குக்காகவோ,ஹேருக்காகவே சொல்வது இல்லை. தமிழனாக இருந்தால் ஹேர் செய்யுங்கள் என்பது இல்லை தண்ணீர் தேவை படுகிறவர்கள் அனைவரும் இதைப்பற்றி உங்கள் நண்பர்களிடம் உரையாடுங்கள். பேசுங்கள் முடிந்த வரை தண்ணீரை சேமிப்போம்” என்றிருக்கிறார்.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்