முகப்புகோலிவுட்

அஜித் படத்தில் ரீ என்ட்ரீ கொடுக்கும் வடிவேலு?

  | November 13, 2019 15:51 IST
Vadivelu

துனுக்குகள்

  • வலிமை படத்தில் அஜித் நடித்து வருகிறார்
  • இந்த படத்தில் வடிவேலு இணையவிருப்பதாக செய்திகள் வெளியகிறது
  • ராஜா படத்தில் வடிவேலு நடித்திருந்தார்
சமீப காலமாக தமிழ் சினிமாவில் படங்களை தவிர்த்து வந்த வடிவேலு தற்போது அஜித் படத்தின் மூலம் ரீஎன்ட்ரீ கொடுக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது.
 
நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றிக்கு பின் நடிகர் அஜித் இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ‘வலிமை' என்று படக்குழு பெயரிட்டுள்ளது. யுவன் சங்கர் ராஜா  இப்படத்திற்கு இசையமைக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். கலை இயக்குனராக தோட்டா தரணி இணைந்துள்ளார்.
 
மேலும் இப்படத்தில் வைகைப்புயல் வடிவேலு நடிக்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. 17 ஆண்டுகளுக்கு முன்பு இயக்குநர் எழில் இயக்கத்தில் ராஜா என்கிற திரைப்படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்திருந்தார். 'ஆனந்த பூங்காற்றே', 'மைனர் மாப்பிள்ளை', 'ராசி' ஆகிய படங்கில் இருவரும் நடித்திருந்தனர்.  இதன் பின்னர் மீண்டும் 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைந்து நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்