முகப்புகோலிவுட்

சந்தானத்துடன் இணைகிறாரா கவுண்டமணி?

  | June 19, 2019 19:38 IST
Santhanam Goundamani

துனுக்குகள்

  • சந்தானம் நடிப்பில் வெளியான தில்லுக்கு துட்டு 2 படம் நல்ல வரவேற்பை பெற்றது
  • இவர் நடிப்பில் ஏ1 படம் வெளியாக இருக்கிறது
  • சிம்பு இவரை சினிமாவிற்கு அறிமுகப்படுத்தினார்
தமிழ்சினிமாவில் காமெடி உலகத்தை ஒரு காலகட்டத்தில் தன்வசப்படுத்தி வைத்திருந்தவர் கவுண்டமணி. அவருக்கு நிகர் அவர்தான் என்கிற அளவிற்கு தனக்கென தனிப்பாதை அமைத்து இன்றுவரை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர்.
 
அவருக்கு பின் வடிவேலு தமிழ் சினிமா உலகில் சாதனை மனிதாரா வளம் வந்தார். அவரைத் தொடர்ந்து சில நாட்கள் சந்தானத்தின் கொடி பறக்கத் தொடங்கியது. தொடங்கிய வேகத்திலே அவர் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கி விட்டதால் அவர் ஆதிக்கம் குறைந்தது.
 
தற்போது சந்தானம் கதாநாயகனாக நடித்துவரும் நிலையில் அவர் நடிக்கும் புதிய படத்தில் கவுண்டமணியை நடிக்க வைக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
 
பூமராங் படத்தை இயக்கிய கண்ணன் இந்தப் படத்தை இயக்குகிறார். கதாநாயகனாக நடிக்கும் போதும் சந்தானம் அனைவரையும் கலாய்த்து காமெடி செய்துவரும் நிலையில் கவுண்டமணி படத்தில் இணைந்ததால் யார் யாரை கலாய்ப்பர் என்ற கேள்வி எழுந்துள்ளது.
 
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்