முகப்புகோலிவுட்

“சிம்பு படப்பிடிப்புக்கு வர மறுக்கிறார்”! தயாரிப்பாளர் சங்கத்தில் சிம்பு மீது புகார் ?

  | October 10, 2019 11:02 IST
Simbu

துனுக்குகள்

  • இதே பிரச்னையால் மாநாடு படமும் நிறுத்தப்பட்டது
  • ஞானவேல் ராஜா தற்போது சங்கத்தில் புகார் அளித்துள்ளார்
  • சிம்பு தரப்பில் எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை
நடிகர் சிம்பு (Simbu) ஒப்பந்தம் செய்யப்பட்டபடி படத்தில் நடித்து கொடுக்கவில்லை என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.
 
தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஞானவேல் ராஜா அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது: மஃப்டி படத்தில் சிம்பு நடிப்பதாக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஆனால் அவர் படப்பிடிப்புக்கு வர மறுக்கிறார். இதனால் அதிகச் செலவு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று புகாரில் கூறப்பட்டுள்ளது.
 
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் மாநாடு என்கிற படம் உருவாகவுள்ளதாகக் கடந்த வருடம் அறிவிக்கப்பட்டது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு, 2019 கோடைக்காலத்தில் படம் வெளியாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. பிறகு இந்த வருடம் ஜூன் 25 முதல் படப்பிடிப்பு தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், மாநாடு படத்திலிருந்து சிம்பு நீக்கப்பட்டதாக அறிவித்தார் படத்தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. எவ்வளவோ இழுத்துப் பிடித்தும் கால விரயம் தான் நிகழ்ந்ததே தவிர, படம் தொடங்க இயலவில்லை. அதனால் சிம்பு 'நடிக்க இருந்த' மாநாடு படத்தைக் கைவிடுவதைத் தவிர்க்க இயலவில்லை. சிம்புவின் அன்பும் நட்பும் தொடரும். வெங்கட் பிரபு இயக்க, மாநாடு படம் எனது தயாரிப்பில் புதிய பரிமாணத்தோடு தொடங்கும். விரைவில் அந்த அறிவிப்பு வரும் என்று அவர் அறிக்கை வெளியிட்டார்.

இதை வாசிக்க: நிலமே எங்கள் உரிமை!

இதன் பிறகு, சிம்புவின் புதிய படம் குறித்து டி.ராஜேந்தர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். சிம்பு அடுத்ததாக மகா மாநாடு என்கிற படத்தை இயக்கி நடிக்க உள்ளதாகவும் அந்தப் படத்தின் பட்ஜெட் ரூ. 125 கோடி என்றும் அறிவித்தார். 5 மொழிகளில் உருவாகவுள்ள இந்தப் படத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரிக்கவுள்ளது என்றும் கூறினார். இந்நிலையில் சிம்பு மீது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். என தகவல்கள் வெளியாகி வருகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்