முகப்புகோலிவுட்

கொரோனா இல்லை, ஆனால் அறைக்குள் அடைந்து கிடக்கும் மணிரத்னம் மகன்.! சுஹாசினி போட்ட வீடியோ..!

  | March 23, 2020 09:57 IST

நந்தனை அவர் இருக்கும் அறைக்கு வெளியே நின்று கண்ணாடி வழியாக இந்த வீடியோவை சுஹாசினி மணிரத்னம் பதிவு செய்துள்ளார்.

கொரோனா தொற்று உலகம் முழுவதும் தீயாகப் பரவி, நாளுக்கு நாள் பல பேரை பாதித்து, சிலரின் உயிரையும் பலி வாங்கி வருகிறது. இதற்கிடையில், பல்வேறு நாடுகளிலிருந்து தாய்நாடு இந்தியாவுக்குத் திரும்பும் பலருக்கும் இந்த வைரஸ் தொற்று உள்ளது. அவர்களாலேயே இங்கு இந்தியாவில் தற்போது கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டிருக்கிறது. அப்படி வரும் ஒவ்வொருவரையும் விமான நிலையத்திலேயே வைத்து பரிசோதனை செய்யப்பட்டு, வைரஸ் தொற்று அறிகுறிகள் இருப்பவர்களைச் சிகிச்சைக்காகத் தனிமைப் படுத்தியும், அறிகுறிகள் இல்லாதவர்களைக் கையில் சீல் குத்தப்பட்டு நகரங்களில் அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான மணிரத்னத்தின் மகன் நந்தன் மணிரத்னம், சென்னையில் தனது வீட்டின் அறைக்குள் 5 நாட்களாக முடங்கிக் கிடக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. காரணம், அவர் கடந்த மார்ச்-18-ஆம் தேதி லண்டனிலிருந்து சென்னை வந்துள்ளார். அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், தன்னைச் சுற்றி உள்ளவர்களின் பாதுகாப்பையும் கருதி, தொடர்ந்து 14 நாட்கள் ஒரு அறைக்குள் தனிமைப் படுத்திக்கொள்ளவிருக்கிறார். இந்த இக்கட்டான சூழ்நிலையில் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் அடுத்த இரண்டு வாரங்களுக்கு எவ்வாறு இருக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

நந்தனை அவர் இருக்கும் அறைக்கு வெளியே நின்று கண்ணாடி வழியாக இந்த வீடியோவை சுஹாசினி மணிரத்னம் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவை நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சமூகத்தில் பொறுப்பாக நடந்துகொள்ளும் மணிரத்னம் குடும்பத்தைப் பலரும் பாராட்டிவருகின்றனர்.விளம்பரம்
விளம்பரம்
விளம்பரம்