முகப்புகோலிவுட்

'வைரமுத்து எழுதிய கொரோனா பாடல்' - குரல் கொடுத்த எஸ்.பி.பாலசுப்ரமணியம்

  | March 28, 2020 08:31 IST
Spb

துனுக்குகள்

 • கொரோனா தாக்கம் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு நிலவி வருகின்றது
 • ஏற்கனவே மார்ச் 31ம் தேதி வரை நீடிக்கும் என்று கூறப்பட்ட இந்த தடை
 • வைரமுத்து இந்த கொரோனா குறித்த ஒரு பாடலை எழுதியுள்ளார்
கொரோனா தாக்கம் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு நிலவி வருகின்றது. இதனால் பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், நகைக்கடைகள் போன்ற பல நிறுவனங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. ஏற்கனவே மார்ச் 31ம் தேதி வரை நீடிக்கும் என்று கூறப்பட்ட இந்த தடை தற்போது ஏப்ரல் மாதம் 14ம் தேதி வரை நீட்டிக்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் ஏற்கனவே 29 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஒரே நாளில் சுமார் 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 35-ஐ எட்டியுள்ளது. அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளே இந்த நோயின் தாக்கத்தைக் கண்டு கலங்கிப்போய் உள்ள நிலையில் இந்திய அரசும் தன்னால் ஆனால் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது. 

இந்நிலையில் கவிஞர் வைரமுத்து இந்த கொரோனா குறித்த ஒரு பாடலை எழுதியுள்ளார். அந்த பாடலுக்கு அழகாக மெட்டமைத்துப் பாடியுள்ளார் பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன். இதைப் பிரபல சினிமா PRO நிக்கில் முருகன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com