முகப்புகோலிவுட்

‘கொரோனோவை வெல்வோம்’ இயக்குநர் வசந்த பாலன் நடத்தும் ஓவியப்போட்டி..! சூப்பர் சார்..!

  | March 23, 2020 10:20 IST
Corona

தேசிய விருது பெற்ற இயக்குநர் வசந்த பாலன் ஆல்பம், வெயில், அங்காடித் தெரு, அரவான், காவியத் தலைவன் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

கொரோனா பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, இனிமேல்தான் இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், ஞாயிறு முதற்கொண்டு மிக அவசியம் ஏற்பட்டாலன்றி, காலை 7 மணியிலிருந்து இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

அதையடுத்து, இந்தியா முழுவதும் நாளை ஜனதா ஊரடங்கை கடைப்பிடிக்கவுள்ளனர். பலரும் நாளை முழுவதும் வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே இருக்கவுள்ள நிலையில், தற்போது குழைந்தாளுக்காக ஒரு சுவாரஸ்யமான ஓவியப்போட்டி ஒன்றை இயக்குநர் வசந்த பாலன் அறிவித்துள்ளார். ‘கொரோனோவை வெல்வோம்' என்ற தலைப்பில் வரைந்து தனது இ-மெயில் ஐடிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இந்த போட்டியில் வெல்வோருக்குப் பரிசுகளும் உண்டு. இவரின் இந்த முயற்சிக்குப் பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்துவருகின்றனர்.

அதில், “நண்பர்களே! தனிமைப்படுத்துதல் தேவை தான். ஆனால் பாவம் அது குழந்தைகளுக்கு பெரும் சிறையாக இருக்கிறது. எவ்வளவு நேரம் தான் படி படி என்ற வன்முறையை குழந்தைகள் மீது பிரயோகிப்பது. இதில் 22 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நம்மை நாமே வீடடங்கி மக்களே ஊரடங்கு ஏற்படுத்தும் நாள்.வரலாற்றுத்தருணம். அன்று புத்தகம் வாசித்தல், டிவி பார்த்தல், செல்போன் நோண்டுதல்,கேரம்போர்டு மற்றும் செஸ் விளையாடுதல் தவிர வேறு என்ன செய்யலாம் ? 
அதனால் அன்று 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஒரு ஓவியப்போட்டி அறிவிக்கலாம் என்று தோன்றியது. வீட்டிலிருந்தபடியே A4 வெள்ளைப்பேப்பரில் வண்ணப்பென்சில் அல்லது சாதாரண பென்சிலில் வரைந்து அலைபேசியில் புகைப்படம் எடுத்து என் மின்அஞ்சல் முகவரிக்கு (vasantabalan@gmail.com)  அனுப்பி வைக்கலாம்.

காலக்கெடு : 22-ம்தேதி காலை 10 மணி  முதல் 23-ம் தேதி காலை 10 மணி வரை வரும் மெயில்கள் மட்டுமே போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

ஓவியங்கள் அனுப்பும் குழந்தைகளின் புகைப்படம், படிக்கும் வகுப்பு, பள்ளியின் விபரம் இணைக்கப்படுதல் அவசியம். பெற்றோர்கள் வரைந்து தருவதைத் தவிர்க்க வேண்டும். முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு என்று மூன்று பரிசுகள் உண்டு. ஒருவரே எத்தனை படங்கள் வேண்டுமானாலும் வரைந்து அனுப்பி வைக்கலாம். தலைப்பு : கொரோனோவை வெல்வோம் “ என்று தெரிவித்துள்ளார்.

தேசிய விருது பெற்ற இயக்குநர் வசந்த பாலன் ஆல்பம், வெயில், அங்காடித் தெரு, அரவான், காவியத் தலைவன் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். அடுத்ததாக, இந்த ஆண்டின் இறுதிக்குள் ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் அவரது ‘ஜெயில்' திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com