முகப்புகோலிவுட்

'உன்னை பார்த்தால் டீசென்டா இருக்கு' - கொரோனாவிடம் பேச்சுவார்த்தை நடத்திய சிவா

  | March 30, 2020 09:52 IST
Coronavirus

துனுக்குகள்

 • பல நடிகர் நடிகைகள் தங்களால் இயன்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்
 • எப்போதும் ஒரு விழிப்புணர்வை நகைச்சுவை கலந்த சொல்வது
 • சினிமா மற்றும் சின்னத்திரை நாடகங்களின் படப்பிடிப்புகளும்
உலகம் முழுதும் பல ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்துள்ளது கொரோனா நோய்த் தொற்று, இந்தியாவைப் பொறுத்தவரை 1000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நோய் தாக்கத்தால் 25-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மத்திய அரசும் மாநில அரசும் இந்த நோய் பரவாமல் இருக்கப் பல வகையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. 

இந்தியாவில் ஏற்கனவே எல்லாம் வணிக வளாகங்கள் மற்றும் சினிமா அரங்குகள் ஆகியவை சுகாதார நடவடிக்கைகள் கருதி ஏப்ரல் 14ம் தேதி வரை மூடப்பட்டுள்ளன. சினிமா மற்றும் சின்னத்திரை நாடகங்களின் படப்பிடிப்புகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழலில் மக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள பல நடிகர் நடிகைகள் தங்களால் இயன்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சிவா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் "கொரோனா உன்னை பார்த்தால் ரொம்ப டீசென்டா தெரியுது, அதனால் சீக்கிரம் போயிடு என்று பேசியுள்ளார்." எப்போதும் ஒரு விழிப்புணர்வை நகைச்சுவை கலந்த சொல்வது அவருடைய இயல்பு என்பதை அவர் மீண்டும் நிரூபித்துள்ளார்.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com