முகப்புகோலிவுட்

பரவும் கொரோனா : சொந்த ஊரில் களமிறங்கிய நடிகர் விமல்

  | March 30, 2020 09:58 IST
Vimal

துனுக்குகள்

 • உலகம் முழுவதும் கொரோனா நோய் தொற்று தாண்டவமாடி வருகிறது
 • ஐரோப்பிய நாடுகள் திகழும் நிலையில் இந்த தொற்று
 • பன்னாங்கொம்பை பகுதியில் வீடு வீடாக சென்று கிரும்பி நாசினி
உலகம் முழுவதும் கொரோனா நோய் தொற்று தாண்டவமாடி வருகிறது. சீனாவின் தலைநகர் ஹூபே மாகாணத்தில் வுஹான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் பரவ தொடங்கியது இந்த கொரோனா நோய் தொற்று. உலகத்தில் தற்போது கொரோனா இல்லாத இடம் இல்லை என்றாலும் அது தகும் என்ற அளவிற்கு உலகம் முழுவதும் பரவி கிடக்கிறது இந்த கொரோனா. இந்த நோய் பரவலின் மையப்பகுதியாக தற்போது ஐரோப்பிய நாடுகள் திகழும் நிலையில் இந்த தொற்று ஆரம்பித்த வுஹான் நகரில் ரயில் போன்ற அத்யாவசிய சேவைகள் மெல்ல மெல்ல மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியாவைப் பொறுத்தவரை பிரதமர் கடந்த வாரம் மார்ச் 31ம் தேதி வரை விதிக்கப்பட்டிருந்த தடையை ஏப்ரல் மாதம் 14ம் தேதி வரை நீடித்து உத்தரவிட்டார். இந்த இக்கட்டான சூழ்நிலையில் மக்களுக்கு உதவு பல திரைப்பிரபலங்களும் களமிறங்கி உள்ளனர் பிரபல நடிகர் விமல் தனது சொந்த ஊரான மணப்பாறையை அடுத்த பன்னாங்கொம்பை பகுதியில் வீடு வீடாக சென்று கிரும்பி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றார். 

கிருமி நாசினி தெளிக்கும் இயந்திரத்தை தோளில் சுமந்தபடி வீடு வீடாக சென்ற அவர் மருந்தினை தெளித்தார்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com