முகப்புகோலிவுட்

"கொரோனா ஒரு சிறந்த ஆசான்" - பிரபல நடிகர் பார்த்திபன் ட்வீட்..!

  | September 05, 2020 15:22 IST
Parthiban

துனுக்குகள்

 • இன்று இந்தியா முழுவதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது என்பது
 • இந்நிலையில் திரைப்பிரபலங்கள் பலரும் தங்களுடைய ஆசான்களுக்கும்
 • அதே போல பிரபல நடிகருக்கு இயக்குநருமான திரு. பார்த்திபன் வெளியிட்ட பதிவில்
இன்று இந்தியா முழுவதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அந்த நாட்டின் கல்வியின் தரத்தை கொண்டே கணிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பிச்சை புகினும் கற்கை நன்றே என்ற பெரியோர் வாக்கும் அதற்கும் சாட்சி. செப்டம்பர் 5 1888ம் ஆண்டு பிறந்த  ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளையே நாம் ஆசிரியர் தினமாக கொண்டாடி வருகின்றோம் என்பது குறிப்பிடத்தக்கது. ராதா கிருஷ்ணன் அவர்கள் இந்திய நாட்டின் இரண்டாவது குடியரசு தலைவர் என்பதும் நாம் அறிந்ததே. 

இந்நிலையில் திரைப்பிரபலங்கள் பலரும் தங்களுடைய ஆசான்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தங்களுடைய வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். பிரபல நடிகர் திரு. கமல்ஹாசன் வெளியிட்ட பதிவில் "நாளைய தமிழகத்தின் நம்பிக்கையாம் நம் பிள்ளைகளுக்கு நற்கல்வி தந்து சான்றோர்களாக உருவாக்குவது நல் ஆசிரியர்கள்தான். அவர்களை இன்றும் என்றும் நினைவில் கொண்டு வாழ்த்துவோம். போற்றுவோம்." என்று குறிப்பிட்டிருந்தார். 

அதே போல பிரபல நடிகருக்கு இயக்குநருமான திரு. பார்த்திபன் வெளியிட்ட பதிவில் "கொரோனா ஒரு சிறந்த ஆசான். அது நமக்கு பலவற்றை கற்றுத்தந்துள்ளது" என்று குறிப்பிட்டு தனது பாணியில் ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com