முகப்புகோலிவுட்

ஜீவாவின் ‘சீறு’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

  | November 12, 2019 16:09 IST
Seeru

துனுக்குகள்

  • ஜீவாவின் ‘சீறு’ திரைப்படத்தை ரத்தின சிவா இயக்கியுள்ளார்.
  • இப்படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார்.
  • இதில் ஜீவாவுக்கு ஜோடியாக ரியா சுமன் நடிக்கிறார்.
ரத்தின சிவா இயக்கத்தில் ஜீவா நடிக்கும் ‘சீறு' திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

விஜய் சேதுபதி நடித்த ‘றெக்க' திரைப்படத்தின் இயக்குனர் ரத்தின சிவா இயக்கத்தில் ஜீவா கதாநாயகனாக நடிக்கும் படம் ‘சீறு'. இப்படத்தை வேல்ஸ் ஃபில்ம் இண்டெர்னேஷ்னல் தயாரித்துள்ளது. இப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக ரியா சுமன் நடிக்கிறார். அதெபோல், ஜீவாவுக்கு வில்லனாக ‘அறிந்தும் அறியாமலும்' நவ்தீப் நடித்துள்ளார். ஆக்‌ஷன் த்ரில்லர் கதைக்களத்தில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்துக்கு டி. இமான் இசையமைக்கிறார்.

கடைசியாக ‘கொரில்லா' திரைப்படம் வந்ததும் தெரியாமல், போனதும் தெரியாமல், நினைத்த அளவுக்கு வெற்றிபெறாமல் போன நிலையில், ‘சீறு' படம் ஜீவாவுக்கு ஒரு நல்ல கம் பேக்காக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.   
இந்நிலையில் இப்படத்தின் ரெலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. வரும் டிசம்பர் மாதம் 20-ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட டி. இமான், இப்படத்தின் ஆடியோ விரைவில் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.
ஜீவாவுக்கு சீறு படத்தையடுத்து, ராஜு முருகன் இயக்கத்தில் ‘ஜிப்ஸி', அருள்நிதியுடன் இணைந்து ‘களத்தில் சந்திப்போம்' மற்றும் பாலிவுட்டில் ரன்வீர் சிங்குடன் ‘83' ஆகிய படங்கள் வரிசையாகக் காத்திருக்கிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்