முகப்புகோலிவுட்

சிவகார்த்திகேயனின் 16 வது படத்தின் இசை அமைப்பாளரை அறிவித்த சன் பிக்சர்ஸ!

  | May 06, 2019 17:27 IST
D Imman

துனுக்குகள்

  • இப்படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார்
  • இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது
  • சிவகார்த்திகேயனின் 16வது படமாக உருவாகி வருகிறது
 
சீமராஜா படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் மிஸ்டர் லோக்கல் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா  நடித்துள்ளார்.
 
இதனைத் தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 16வது படம் உருவாக இருக்கிறது. இந்த படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
 
இப்படத்தில் இணையும் நடிகர், நடிகைகள் தேர்வு நடை பெற்று வரும் நிலையில் இப்படத்திற்கு டி. இமான் இசை அமைக்கவுள்ளார் என்று இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
 
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தி உருவாகி வரும் ஹீரோ படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கும் படம் ஒன்றிலும் இவர் நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்