முகப்புகோலிவுட்

இணைய தொடரில் இணைந்த தனுஷ்-விஜய் பட வில்லன்!

  | September 24, 2019 19:23 IST
Daniel Balaji

துனுக்குகள்

 • அசுரன் படத்தின் மூலம் நான்றாவது முறையாக தனுஷுடன் நடிக்கிறார் இவர்
 • பிகில் படத்திலும் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்
 • தற்போது முதல் முறையாக இணைய தொடரில் இணையவிருக்கிறார்
கடந்த 2002ம் ஆண்டு வெளியான “ஏப்ரல் மாதத்தில்” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் டேனியல் பாலாஜி.  இப்படத்தை அடுத்து காதல் கொண்டேன், படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்தார்.  சூர்யாவின் காக்க காக்க படத்தில் கவனம் பெற்ற டேனியல் பாலாஜி கமலின் வேட்டையாடு விளையாடு படத்தில் வில்லன் கதாபாத்திரம் ஏற்று மிரட்டினார்.  வேட்டையாடு விளையாடு படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்த படம் என்றே சொல்லலாம் அந்த அளவிற்கு நேர்த்தியான நடிப்பை வெளிபடுத்தி பாராட்டுகளை பெற்றார்.
 
n74kek6g

 
வெற்றிமாறனின் பொல்லாதவன் படத்தில் மீண்டும் வில்லன் கதாபாத்திரம் கனக்கச்சிதமாக பொருந்திப்போக அடுத்தடுத்து பல படங்களில் வில்லன் கதாபாத்திரத்திலே நடித்து வருகிறார் டேனியல் பாலாஜி.
 
தற்போது, தனுஷின் அசுரன், விஜய்யின் பிகில் படத்தில் வில்லன்  கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களும் வெளியாக தயார் நிலையில் இருக்கிறது.
 
இந்நிலையில் இணைய தொடரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 'காட் மேன்' எனும் இணைய தொடரில் ஆன்மீக குருவாக நடிக்க உள்ளார். இந்த தொடரை ஜெயம் ரவி நடித்த தாஸ் படத்தை இயக்கிய பாபு யோகேஷ்வரன் இயக்க உள்ளார். விஜய் ஆண்டனியை வைத்து இவர் இயக்கியுள்ள தமிழரசன் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
 
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com