தனுஷின் அசுரன் திரைப்படம் இன்று 50-வது நாளாக பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் மற்றும் மஞ்சு வாரியர் இணைந்து நடித்து அக்டோபர் 4-ஆம் தேதி வெளியான படம் அசுரன். இப்படத்தில் கென் கருனாஸ், டீஜே அருணாசலம், பசுபதி, ஆடுகளம் நரேன், அம்மு அபிராமி, இயக்குனர் பாலஜி சக்திவேல், வேல்ராஜ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
பூமணியின் ‘வெக்கை' எனும் நாவலைத் தழுவி பஞ்சமி நில ஆக்கிரமிப்பு குறித்தும், இன வெறி மற்றும் ஒடுக்குமுறை குறித்து எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்துக்கு உலகம் முழுக்க இருக்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்தை பார்த்துவிட்டு மு.க.ஸ்டாலின், தொல் திருமாவளவன், சீமான் உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரமுகர்கள் அசுரன் படக்குழுவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் 150 கோடி பாக்ஸ் ஆபீஸ் சொலெக்ஷன் பட லிஸ்ட்டில் சேர்ந்த இப்படம், வெளியாகி 50-வது நாளாக இன்றும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடுகிறது. இதைக் கொண்டாடும் விதமாக தனுஷ் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் #AsuranBB50Days என்ற ஹாஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.