முகப்புகோலிவுட்

ஆதித்ய அருணாச்சலம் என் அப்பா - 'தர்பார்' குறித்து பிரபல நடிகை ட்வீட்!

  | October 19, 2019 12:42 IST
Darbar

துனுக்குகள்

  • தர்பார் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து பின்னணி வேலைகள் நடக்கிறது
  • நிவேதா தாமஸ் இந்த படத்தில் ரஜினியின் மகளாக நடித்துள்ளார்
  • தற்போது ட்விட்டர் மூலம் இதனை தெரிவித்துள்ளார்
லைகா தயாரிப்பில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி தர்பார் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த ஆண்டு பேட்ட படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினி இந்த கூட்டணியில் இணைந்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகளை நிறைவு செய்த ரஜினி ஆண்மீக பயணமாக இமயமலை சென்று நேற்று சென்னை திரும்பினார்.
 
பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் இப்படத்தில் நயன்தாரா,யோகிபாபு, நிவேதா தாமஸ், ஸ்ரேயா, ஸ்ரீமன், சுனில் ஷெட்டி, தம்பி ராமய்யா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
 
நீண்ட நாட்களுக்கு பிறகு ரஜினி காவல்துறை அதிகாரியாக இப்படத்தில் நடித்துள்ளார். இது குறித்து சமீபத்தில் கருத்து தெரிவித்த முருகதாஸ் இந்த படத்தில் மூன்று முகம் ரஜினியை பார்க்கலாம் என்று தெரிவித்திருந்தார்.
 
b6rfh3t8
இதனை அடுத்து இந்த படத்தில் நடித்துள்ள நிவேதா தாமஸ் ரஜினியின் மகளாக நடித்துள்ளார் என்று செய்திகள் வெளியாகின.

அதனை உறுதி செய்யும் வகையில் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ‘ஆம் ஆதித்யா அருணாச்சலம் என்னடைய அப்பாதான் என்று பதிவிட்டுள்ளார்” இப்படத்தில் ரஜினி ஆதித்யா அருணாச்சலம் என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்