முகப்புகோலிவுட்

'தர்பார்' திரைப்படத்தின் மாஸ் அப்டேட் ! மகிழ்ச்சியில் ரஜினி ரசிகர்கள்!

  | November 19, 2019 16:43 IST
Darbar

துனுக்குகள்

  • அடுத்த ஆண்டு ஜனவரி 9ல் இப்படம் வெளியாக இருக்கிறது
  • இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்
  • இப்படத்தை அடுத்து சிவா இயக்கத்தில் நடிக்கிறார் ரஜினிகந்த்
தர்பார் திரைப்படத்தின் இசை மற்றும் வெளியிடும் தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
இந்த ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான பேட்ட படத்தின் வெற்றியைத்தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் "தர்பார்". இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயந்தாரா நடிக்க இவர்களுடன் யோகி பாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி இருக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்தின் படப்பிடிப்பு முடிந்து படத்தின் பின்னணி வேலைகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் டப்பிங் பணிகளை ரஜினிகாந்த் முடித்தார். இப்படம் வரும் பொங்கல் விடுமுறையில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது இதனை அடுத்து இதனை உறுதி செய்யும் விதத்தில் அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில் இந்தப் படத்தின் இசை டிசம்பர் 7ம் தேதி வெளியாகவுள்ளதாகவும், அதனை தொடர்ந்து ஜனவரி 9ம் தேதி தர்பார்' திரைப்படத்தை வெளியிடவுள்ளதாகவும் லைகா நிறுவனம் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.
இந்த படத்தை அடுத்து ரஜினிகாந்த் சிவா இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க டி. இமான் இசை அமைக்கிறார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்