முகப்புகோலிவுட்

தர்பார் படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியானது! மீண்டும் ட்விட்டரில் முதலிடம் பிடித்த தர்பார்

  | September 11, 2019 18:57 IST
Darbar

துனுக்குகள்

  • இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது
  • யோகி பாபு இப்படத்தில் நடித்து வருகிறார்
  • லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படம் மும்பையில் படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இப்படத்தின் இரண்டாவது போஸ்டர் இன்று மாலை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் படி தற்போது ரஜினி நடித்துவரும் தர்பார் படத்தின் இரண்டாவது போஸ்டரை இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் இந்த போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
 
இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். காமெடி வேடத்தில் யோகி பாபு நடிக்கிறார். அனிருத் இசை அமைக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு இப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்