முகப்புகோலிவுட்

ரஜினியின் தர்பார் படத்தில் இணைந்திருக்கும் ‘தர்மதுரை’ பிரபலம்! குவியும் வாழ்த்துகள்!!

  | June 24, 2019 16:36 IST
Rajinikanth

துனுக்குகள்

  • ஏ.ஆர். முருகதாஸ் இப்படத்தை இயக்கி வருகிறார்
  • அனிருத் இப்படத்திற்கு இசை அமைக்கிறார்
  • ரஜினியுடன் நயன்தாரா இப்படத்தில் நடிக்கிறார்
ஆர்.கே.சுரேஷ் தயாரிப்பில் கடந்த ஆண்டு 2016ல் இயக்குநர் சீனுராமசாமி இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘தர்மதுரை' இப்படத்தில் விஜய்சேதுபதி, ஐஷ்வர்யா ராஜேஷ், தமன்னா இன்னும் பலர் நடித்திருந்தனர்.
 
இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தி திருநங்கை ஜீவா என்பவர் நடித்திருந்தார். பல்வேறு குறும்படங்களில் நடித்து விருதுகளை வென்ற இவர் தர்மதுரை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கவனம் பெற்றார்.
 
இந்த படத்தை தொடாந்து தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி வரும் தர்பார் படத்தில் ரஜினியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்திருக்கிறார் இவர். இதனை உறுதி செய்யும் விதமாக இயக்குநர் சீனு ராமராமி தனது ட்விட்டர் பக்கத்தில் ‘தர்மதுரை படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியுடன் நடிகையாக அறிமுகமாகி பல குறும்படங்களில் நடித்து விருதுகள் பெற்றுஇன்று சூப்பர் ஸ்டார் தியானி ரஜினிகாந்த்  அவர்களுடன் இணைந்து நடித்திருக்கும் சகோதரி திருநங்கையர்ஜீவா அவர்களுக்கு வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டிருக்கிறார்.
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்