முகப்புகோலிவுட்

பாலிவுட் வில்லன்களை எதிர்கொள்ளும் ரஜினி ‘தர்பார்’ அப்டேட்!

  | July 15, 2019 12:29 IST
Darbar

துனுக்குகள்

  • தர்பார் படத்தில் மூன்று பாலிவுட் நடிக்ர்கள் இணைந்துள்ளனர்
  • பெங்களூரில் தர்பார் பட ஷுட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது
  • தர்பார் படத்தின் மூலம் நயன்தாரா மூன்றாவது முறையாக ரஜினியுடன் நடிக்கிறார்
இந்த ஆண்டு பேட்ட படத்தை அடுத்து ரஜிகாந்த் நடிப்பில் அடுத்து உருவாகி வரும் படம் ‘தர்பார்'. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இவர்களுடன் யோகி பாபு, விவேக், கதிர், இன்னும் பலர் நடிக்கின்றனர்.
 
ஒரு படத்தின் கதாநாயகனை ரசிகர்கள் எந்த அளவிற்கு எதிர்பார்ப்பார்களோ அந்த அளவிற்கு வில்லன் கதாபாத்திரத்தில் யார் நடிக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருக்கும். ரஜினியின் கதாபாத்திரத்திற்கு ஏற்ற சவாலான வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க பாலிவுட் நடிக்கர்கள் ஒப்பந்தமாகி உள்ளார்கள்.
 
அதன்படி தர்பார் படத்தில் ரஜினிகாந்துக்கு திரைக்கதையில் வலுவான எதிர்ப்பு கொடுக்க பல வில்லன்களை தயார் செய்துள்ளார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். பாலிவுட்டில் இஷாக், பாஹி 2 ஆகிய படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த பிரதீக் பாபர் தர்பார் படத்தில் இணைந்தார். சுனில் ஷெட்டி, பிரதீக் பாபரின் தந்தை வேடத்தில் வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்திவருகிறார். இவர்களைத் தொடர்ந்து நவாப் ஷாவும் வில்லன் பாத்திரத்தில் இணைந்துள்ளார்.
 
டைகர் ஸ்ண்டாகை படத்தில் வில்லனாக நடித்து கவனம் பெற்றவர் நவாப் ஷா. அனிருத் இசையில் உருவாகும் தர்பார் படத்தில் ரஜினிகாந்த் நீண்ட இடைவெளிக்கு பின் காவல்துறை அதிகாரி வேடத்தில் நடிக்கிறார்.
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்