முகப்புகோலிவுட்

திடீரென ட்விட்டரில் வைரலான தர்பார் அப்டேட்! கொண்டாட்டத்தில் ரஜினி ரசிகர்கள்!

  | September 11, 2019 17:35 IST
Darbar Update

துனுக்குகள்

  • தர்பார் படம் மும்மையில் படமாக்கப்பட்டு வருகிறது
  • இப்படத்தின் இரண்டாவது போஸ்டர் இன்று மாலை வெளியாகிறது
  • இப்படத்தை அடுத்த ஆண்டு வெளியாக இருக்கிறது
இன்று மாலை தர்பார் படத்தின் இரண்டாவது போஸ்டர்வெளியாகிறது என வெளியான அறிவிப்பு தற்போது ட்விட்டரை எகிர வைத்திருக்கிறது.
 
இந்தாண்டு ரஜினி நடிப்பில் பேட்ட படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘தர்பார்' படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இந்த படத்தில் ‘சந்திரமுகி', ‘குசேலன்' ஆகிய படங்களை அடுத்து நயன்தாரா இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தில் இவர்களுடன் யோகிபாபு காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.  
மும்பையில் விறுவிறுப்பாக நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு மூன்றாம் கட்டத்தை எட்டியுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு ரஜினி காவல்துறை அதிகாரியாக இப்படத்தில் நடித்து வருகிறார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் இப்படத்தின் ஷுட்டிங் ஸ்பாட் போட்டோக்கள் அவ்வப்போது சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இப்படத்தின் பர்ஸ்ட் லுக்போஸ்டர் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது இந்நிலையில் ஓனம் பண்டிகையை முன்னிட்டி இப்படத்தின் இரண்டாவது போஸ்டரை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது அதன் இன்று மாலை 6 மணிக்கும் இரண்டாவது போஸ்டர் வெளியாகிறது இந்த அறிவிப்பை தற்போத ட்விட்டரில் டிரெண்டாக்கி வருகிறார்கள் ரஜினி ரசிகர்கள்.
 
 
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்