முகப்புகோலிவுட்

கவுதம் மேனனுடன் மீண்டும் இணையும் ஹிட் இசையமைப்பாளர்..!

  | July 08, 2020 21:22 IST
Darbuka Siva

இந்த ஆன்தாலஜி வகை தொடரின் மற்ற பிரிவுகளை வெற்றிமாறன், சுதா கொங்கரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் இயக்குகின்றனர்.

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடைசியாக திரைக்கு வந்த திரைப்படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா'. தனுஷ், மேகா ஆகாஷ், சசிகுமார் முக்கிய வேடங்களில் நடித்திருந்த இப்படம் தொடங்கப்பட்டு, 3 ஆண்டுகள் கழித்து கடந்த 2019 நவம்பரில் தால் வெளியானது. இந்த படம் பார்வையாளர்களிடமிருந்தும் விமர்சகர்களிடமிருந்தும் கலவையான பதில்களைப் பெற்றது.

ஆனால், இப்படத்திலிருந்து வெளியான விசிரி, மறுவார்த்தை பேசாதே போன்ற பாடல்கள் சூப்பர்ஹிட்டானது. இப்படத்துக்கு தர்புகா சிவா இசையமைத்திருந்தார். இந்த ஆல்பத்திற்காக ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டார். தர்புக சிவா முன்னதாக சசிகுமாரின் ‘கிடாரி' படத்துக்கு தரமான இசையை கொடுத்திருந்தார்.

இப்போது, கவுதம் வாசுதேவ் மேனனுடன் மீண்டும் கைகோர்த்துள்ளார் தர்புகா சிவா. இயக்குநர் கவுதம் மேனன் நெட்ஃபிளிக்ஸ்காக ஆன்தாலஜி வகை வலை தொடரை இயக்கவுள்ளார். இந்த வெப் சீரீஸுக்கு தர்புகா சிவா இசையமைக்கவுள்ளார்.

இதில் அஸ்வின் காக்கமனு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த ஆன்தாலஜி வகை தொடரின் மற்ற பிரிவுகளை வெற்றிமாறன், சுதா கொங்கரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் இயக்குகின்றனர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com