முகப்புகோலிவுட்

"பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள்" - மீரா விவகாரத்தில் மௌனம் கலைந்த நடிகர் சூர்யா..!

  | August 11, 2020 13:19 IST
Suriya Sarathkumar

துனுக்குகள்

 • அதன் பிறகு த்ரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் போன்ற நடிகைகள் தன்னை காப்பி
 • இதனை அடுத்த பாரதிராஜா அவர்களுக்கு நன்றி தெரிவித்து இந்த விவகாரத்தில் தனது
 • இயக்குனர் இமயம் திருமிகு. பாரதிராஜா அவர்களுக்கு என் உளப்பூர்வமான நன்றிகள்
கடந்த சில மாதங்களாகவே மாடல் அழகி மீரா மிதுன் பல முன்னணி திரைப்பிரபலன்களை கடுமையாக சாடி வருகின்றார். முதலில் தனது ஸ்டைலை காப்பி அடித்துதான் மாஸ்டர் படத்தின் போஸ்டர் வெளியானது என்று சர்ச்சையை கிளப்பிய மீரா தன்னை தமிழகத்தின் முதலமைச்சராக ஆக்கினாள் சிறப்பாக செயல்படுவேன் என்று பிரதமர் மோடிக்கு ட்வீட் செய்தார். பிறகு கடுப்பாகி மோடி அவர்களே தமிழ்நாட்டை அழித்து விடுங்கள் என்றும் சில டீவீட்களை வெளியிட்டார். 

அதன் பிறகு த்ரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் போன்ற நடிகைகள் தன்னை காப்பி அடித்துதான் போட்டோஷூட்களை நடத்தி வருகின்றனர் என்று தெரிவித்தார். சூப்பர் ஸ்டார் கன்னடர், தளபதி விஜய் கிறிஸ்தவர் என்று பல முன்னணி நடிகர்களை பற்றி சமூக வலைத்தளத்தில் கடுமையாக சாடினார். இதனை தொடர்ந்து சூர்யா மற்றும் விஜய் ஆகிய இருவரின் மனைவிகளை பற்றியும் அவதூறாக பேச தொடங்கினார். இந்நிலையில் நேற்று மூத்த இயக்குநர் பாரதிராஜா மீரா மிதுனை கண்டித்து ஒரு அறிக்கையை வெளியிட்டார். 

இதனை அடுத்த பாரதிராஜா அவர்களுக்கு நன்றி தெரிவித்து இந்த விவகாரத்தில் தனது மௌனம் கலைந்துள்ளார் நடிகர் சூர்யா. அவர் வெளியிட்ட பதிவில் "தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம். உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள். சமூகம் பயன் பெற." என்று குறிப்பிட்டுள்ளார் மேலும் மற்றொரு பதிவில் "எனது தம்பி தங்கைகளின் நேரமும், சக்தியும் ஆக்கப்பூர்வமான செயல்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதே என் விருப்பம். இயக்குனர் இமயம் திருமிகு. பாரதிராஜா அவர்களுக்கு என் உளப்பூர்வமான நன்றிகள்.." என்று குறிப்பிட்டுள்ளார்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com