முகப்புகோலிவுட்

சுபஸ்ரீ இறப்பு! பேனர் கலாச்சாரத்திற்கு எதிராக அஜித் ரசிகர்கள் உறுதிமொழி!

  | September 16, 2019 12:06 IST
Ajith Kumar

பேனர் கவிழ்ந்து சகோதரி சுபஸ்ரீ உயிர் இழந்தது வேதனை அளிக்கிறது

துனுக்குகள்

  • பேனர் வைக்க வேண்டாம் என நடிகர்கள் ரசிகர்களுக்கு வேண்டுகோள்
  • அஜித் ரசிகர்கள் பேனர் வைக்க மாட்டோம் என உறுதிமொழி
  • சூர்யா மற்றும் விஜய் ஆகியோர் பேனர் வைக்க வேண்டாம் என கோரிக்கை
(Ajithkumar); கடந்த சில தினங்களுக்கு முன்பு, சென்னை பள்ளிகரனை பகுதியில் சென்னையில் அண்ணா திமுகவினர் வைத்திருந்த பேனர் விழுந்து இளம் பெண் சுபஸ்ரீ பரிதாபமாக உயிர் இழந்தார். இந்த சம்பவம் சமூக மக்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இதனை அடுத்து பேனர் கலாசாரத்தை ஒழிக்க வேண்டும் என்று பலரும் வற்புறுத்தி வருகிறார்கள். அதிமுக, திமுக, வி.சி.க உட்பட் பல அரசியல் கட்சிகள் பேனர்கள் வைப்பதை தவிர்க்குமாறு தொண்டர்களை வற்புறுத்தி உள்ளன. அரசியலை அடுத்து பேனர்கள் அதிகம் பயன்படுத்தப்படும் துறை சினிமாதுறை. ஒவ்வொரு  முறையும் முன்னணி ரசிகர்களின் படங்கள் வரும் போது ராட்சச பேனர்கள் வைக்கப்படுவது வழக்கம். சுபஸ்ரீயின் மரணம் தற்போத பெருமளவில் பேனர் கலாச்சாரத்திற்கு எதிரான கருத்தியலை விதைத்திருக்கிறது. அதன் அடிப்படையில் முன்னணி நடிகர்கள் பலரும் ரசிகர்கள் பேனர் கட்-அவுட்கள் வைப்பதைத் தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

இதை படிக்க; சூர்யா ரசிகர்களின் அதிரடி அறிவிப்பு!
 
sdskjeho
 

பாடல் வெளியீட்டு விழாக்களிலும் கட்-அவுட்கள் அமைக்கின்றனர். திருமணம், மற்றும் பிறந்த நாள் விழாக்களிலும் நடிகர்கள் படங்களுடன் சாலைகளில் பிரமாண்ட பேனர்களை வைக்கின்றனர். வருகிற 19ஆம் தேதி சென்னையில் நடைபெறும் விஜய்யின் பிகில் பட பாடல் வெளியீட்டு விழாவில் கட் அவுட் பேனர்கள் வைக்க வேண்டாம் என்று விஜய் கூறியுள்ளார்.  இதுபோல் பேனர்கள் வைக்க வேண்டாம் என்று நடிகர்கள் விஜய்,(Vijay) சூர்யா(Suriya) ஆகியோர் ரசிகர்களுக்கு தடை விதித்து உள்ளனர்.
 
இந்நிலையில், அஜித்குமார் (Ajih kumar) ரசிகர்களும் அஜித்துக்கு பேனர்கள் வைக்க மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்து போஸ்டர்கள் ஒட்டி பேனர் கலாசாரத்துக்கு எதிராக களம் இறங்கி உள்ளனர்.
  அதில், “பேனர் கவிழ்ந்து சகோதரி சுபஸ்ரீ உயிர் இழந்தது வேதனை அளிக்கிறது. அஜித் படங்களுக்கு அவரது புகழை பரப்பும் விதமாக எந்த ஒரு நிகழ்விலும் பொது இடங்களில் பேனர் வைக்க மாட்டோம் என்று உறுதி மொழி எடுக்கின்றோம்” என்று குறிப்பிட்டு உள்ளனர். இந்த பதிவினை காமமெடி கிங் யோகி பாபு (yogibabu) தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.  

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்