முகப்புகோலிவுட்

"இது பக்கா மாஸ் கமெர்சியல் படம்" - கதிர்வேலு இயக்கத்தில் சசிகுமாரின் 'ராஜவம்சம்'..!

  | August 04, 2020 14:46 IST
Kathirvelu

துனுக்குகள்

 • சுப்ரமணியபுரம் மற்றும் ஈசன் ஆகிய படங்களை இயக்கியுள்ள சசிகுமார் இதுவரை
 • இந்நிலையில் தற்போது எம்.ஜி.ஆர். மகன் என்ற படத்தில் சசிகுமார் நடித்து
 • திரையரங்குகளில் வெளியாகும் என்று இப்படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார்
தமிழ் சினிமாவில் 2008ம் ஆண்டு வெளியான 'சுப்ரமணியபுரம்' என்ற தனது முதல் படத்திலேயே பெரிய அளவில் வெற்றி கண்டவர் தான் இயக்குநரும் நடிகருமான மஹாலிங்கம் சசிகுமார். ஆரம்பகாலத்தில் பிரபல இயக்குநர் பாலா அவர்களிடம் சேது உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றினார். அதன் பிறகு அமீர் அவர்களின் மௌனம் பேசியதே மற்றும் ராம் உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றினார். 

சுப்ரமணியபுரம் மற்றும் ஈசன் ஆகிய படங்களை இயக்கியுள்ள சசிகுமார் இதுவரை 20-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2016ம் ஆண்டு பிரசாத் முருகேசன் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியான 'கிடாரி' திரைப்படம் மக்களிடமும்,விமர்சகர்கள் இடையேயும் பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. 

இந்நிலையில் தற்போது எம்.ஜி.ஆர். மகன் என்ற படத்தில் சசிகுமார் நடித்து வருகின்றார். மேலும் புதுமுக இயக்குநரும் பிரபல இயக்குநர் சுந்தர்.சி அவர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய திரு. கதிர்வேலு அவர்களின் இயக்கத்தில் 'ராஜவம்சம்' என்ற படத்திலும் நடித்துள்ளார். நக்கி கல்ராணி இந்த படத்தில் அவருடன் நடித்துள்ளார். மேலும் மூத்த நடிகர் விஜயகுமார், டத்தோ ராதாரவி, மூத்த நடிகை சுமித்ரா, மனோபாலா, தம்பி ராமையா, யோகி பாபு, சதீஷ் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். லாக் டவுன் முடிந்தவுடன் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று இப்படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com