முகப்புகோலிவுட்

'பிகில்' படத்தில் நீக்கப்பட்ட அரசியல் காட்சி – படத்தொகுப்பாளர் ரூபன்

  | October 25, 2019 11:09 IST
Bigil

துனுக்குகள்

 • இப்படத்திற்கு ரூபன் படத்தொகுப்பாளராக பணியாற்றி இருக்கிறார்
 • வரும் 25ம் தேதி பிகில் படத்துடன் மோதுகிறது கைதி திரைப்படம்
 • விஜய் இந்த படத்தில் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்
விஜய் – நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பிகில்'. இந்த படம் வரும் தீபாவளி விடுமுறை நாட்களை குறிவைத்து வரும் 25ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட சில காட்சிகள் குறித்து இப்படத்தை படத்தொகுப்பாளர் ரூபன் தனியார் வலையொளி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.
 
கதிரி,யோகி பாபு, விவேக், ஆனந்த் ராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் பெண்கள் கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இப்படத்தின் பாடல்,மற்றும் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. சமீபத்தில் இப்படத்தின் இசைவெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் விஜய் அரசியல் குறித்து பேசிய சில கருத்துகள் வைரலானது. அரசியல் தளத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் சமீப காலமாக விஜய் படங்களில் அரசியல் பேசும் காட்சிகள் இடம் பெற்று அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில்லும் அரசியல் காட்சி இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
 
இந்நிலையில் இந்த படத்தின் எடிட்டர் ரூபன் அளித்துள்ள பேட்டி ஒன்றில் "விஜய் வசிக்கும் பகுதியில் வாக்கிற்கு பணம் கொடுக்கும் அரசியல்வாதியை கலாய்க்கும் காட்சி ஒன்று எடுக்கப்பட்டிருந்தது. அந்த அரசியல்வாதியை விஜய் சிரித்தப்படியே நக்கல் செய்து மக்கள் வாங்கிய பணத்தை அவரிடமே திரும்ப வாங்கி கொடுப்பார். இந்தக் காட்சியை நீக்கிவிட்டோம் மேலும் விஜய் - நயன்தாரா காதல் காட்சி ஒன்றையும் நீக்கிவிட்டதாக ரூபன் கூறியுள்ளனர்.
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com