முகப்புகோலிவுட்

'சீன தயாரிப்பை புறக்கணிப்போம்' - களமிறங்கும் நடிகை சாக்ஷி அகர்வால்..!!

  | June 21, 2020 08:23 IST
Boycott China

துனுக்குகள்

 • தமிழ் திரையுலகில் “காதலும் கடந்து போகும்”, “காலா", “விஸ்வாசம்” உள்ளிட்ட ப
 • பிக்பாஸ் போட்டிக்கு பிறகு இவர் தற்போது சின்ட்ரெல்லா, ஆயிரம் ஜென்மங்கள்,
 • அனுதினமும் போட்டோஷூட் போட்டு அசத்தும் அவர் தற்போது தனது ட்விட்டர் வாயிலாக
தமிழ் திரையுலகில் “காதலும் கடந்து போகும்”, “காலா", “விஸ்வாசம்” உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் கவனம் பெற்றவர் சாக்ஷி அகர்வால். சமீபத்தில் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி முடிந்த பீக்பாஸ் போட்டியில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்ற இவர் பல்வேறு விமர்சனங்களுக்குள்ளும் சிக்கி போட்டியிலிருந்து வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் வெளியேறினார்.  
 
பிக்பாஸ் போட்டிக்கு பிறகு இவர் தற்போது சின்ட்ரெல்லா, ஆயிரம் ஜென்மங்கள், டெடி உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில்  நடித்து வருகிறார். படவாய்ப்புகள் ஒரு பக்கம் வந்துகொண்டிருக்க, அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை சமூகவலைதங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். 

அனுதினமும் போட்டோஷூட் போட்டு அசத்தும் அவர் தற்போது தனது ட்விட்டர் வாயிலாக ஒரு விழிப்புணர்வினை ஏற்படுத்தி உள்ளார். அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் "இந்தியா சமாதானத்தை விரும்பும் நாடு, ஆனால் சீனா அதை சாதகமாக பயன்படுத்தி கொள்கிறது. நம்மிடம் இருந்து நம்முடையதை எடுத்துச் செல்லப்பார்க்கிறது. ஆதலால் சீன பொருட்களை புறக்கணிப்போம். நான் எனது டிக் டாக் கணக்கை டெலீட் செய்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com