முகப்புகோலிவுட்

"ரொம்ப நன்றி செல்லம்" - ஐஸ்வர்யா வெளியிட்ட Juke Box நன்றி சொன்ன 'குந்தவை'..!

  | August 01, 2020 07:36 IST
Danny

துனுக்குகள்

 • பிரபல நடிகர் சரத்குமாரின் மகளும் ‘மக்கள் செல்வி' என்ற இந்த பட்டத்திற்கு
 • ஆகஸ்ட் 1ம் தேதியான இன்று இந்த படம் OTT தளத்தில் வெளியாகியுள்ளது
 • அனைத்து பாடல்களையும் கொண்ட Juke Boxசை பிரபல நடிகை ஐஸ்வர்யா
பிரபல நடிகர் சரத்குமாரின் மகளும் ‘மக்கள் செல்வி' என்ற இந்த பட்டத்திற்கு மிகவும் பொருத்தமான நடிகை தான் வரலக்ஷ்மி சரத்குமார். ஜோதிகா மற்றும் கீர்த்தி சுரேஷ் வரிசையில் முதல் முறையாக வரலட்சுமியின் 'டேனி' என்ற திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகிறது என்ற தகவல் அனைவரும் அறிந்ததே. அறிமுக இயக்குநர் LC சந்தானமூர்த்தி எழுதி இயக்க, வரலக்ஷ்மி சரத்குமார் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் தான் ‘டேனி. இப்படத்தில் யோகி பாபு, வினோத் கிஷன், வேலா ராமமூர்த்தி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேலும், நாய் ஒன்று முக்கிய பாத்திரத்தை வகிக்கிறது. அந்த நாயின் பெயர் தான் படத்தின் தலைப்பாக வைக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. மோப்ப நாய் அணியில் ஒரு நாய்க்கும் வரலக்ஷ்மிக்கும் இடையிலான பிணைப்பை இந்த படம் கையாள்கிறது. PG மீடியா ஒர்க்ஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார்.

ஆகஸ்ட் 1ம் தேதியான இன்று இந்த படம் OTT தளத்தில் வெளியாகியுள்ளது, இந்நிலையில் நேற்று இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் கொண்ட Juke Boxசை பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடுள்ளார். இதற்கு வரலக்ஷ்மி அவர்களும் தனது நன்றியை தெரிவித்தார்..
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com