முகப்புகோலிவுட்

கார்த்தி, அல்லு அர்ஜுன், யாஷ் & மோகன் லாலுக்கு சவால் விடும் DSP.!!

  | April 29, 2020 15:13 IST
Dsp

முன்னதாக ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்துக்கு இந்த சவாலை பரிந்துரைத்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் மே 3-ஆம் தேதி வரை புட்டுதல் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் தங்கள் வீடுகளிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ளனர். இதற்கு நடிகர் நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்களும் விதிவிலக்கு அல்ல.

பூட்டுதல் காரணமாக திரைத்துறை மொத்தமாக முடங்கியுள்ள நிலையில், நடிகர் நடிகைகள் தங்களுக்கு பிடித்த, பழக்கமில்லாத புதுப் புது செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர். அதேபோல் பலரும் இணையதள சவால்களிலும் தங்கள் திறமையை நிரூபித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது, தென்னிந்திய நட்சத்திரங்களுக்கு இடையே பரவிவரும் சவால் தான் ‘BetheREALMAN challenge'.

‘அர்ஜுன் ரெட்டி' இயக்குநர் சந்தீப் வங்கா துவங்கிய இந்த சேலஞ்சு, இயக்குநர் ராஜமௌலி, ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ‘மெகா ஸ்டார்' சிரஞ்சீவி, விஜய் தேவரகொண்டா ஆகியோரைக் கடந்து பரவிவருகிறது. தற்போது இந்த சவால் தெலுங்கு ‘ஆர்யா' திரைப்பட இயக்குநர் சுகுமார் மூலமாக இசையமைப்பாளர் (DSP) தேவி ஶ்ரீ பிரசாத்க்கு சென்றடைந்து, அவர் அந்த சவாலையும் முடித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த சுவாரஸ்யமான வீடியோவில், முதலில் தேவி ஶ்ரீ பிரசாத்தின் குட்டி மருமகன் தனவ் சத்யா வந்து DSP-ஐ தூக்கத்திலிருந்து எழுப்பி, சவாலுக்கு சுகு மாமா வெயிட்டிங் என கூற, வேகமாக எழுந்து வீடு பெருக்கி, மாப் போட்டு, வீட்டில் உள்ள பொருட்களை சுத்தம் செய்து, பின் தனது தாய்க்கு சூப்பராக ஒரு முட்டை ஆம்லெட் பொட்டு கொடுத்து, பின் டைனிங் டேபிளையும் துடைத்து பல வேலகளை முடிக்கிறார். கடைசியாக தனது தந்தை சத்ய மூர்த்தியை வணங்கி, தன்னை RealMan-ஆக உருவாக்கிய தாயை நினைத்து பெருமை கொள்கிறார். இந்த வீடியோ தற்போது செம வைரலாகிவருகிறது. இந்த வீடியோ படமாக்கப்பட்ட விதமும், அதற்கு கொடுக்கப்பட்ட பின்னணி இசையும், காட்சித் தொகுப்பும் பாராட்டத்தக்க வகையில் சிறப்பாக அமைந்துள்ளது.

மேலும் இந்த பதிவுடன், இந்த ‘BetheREALMAN' சவாலுக்கு தென்னிந்த பிரபலங்களும், தனது திரைத்துறை நண்பர்களான கோலிவுட் நடிகர் கார்த்தி, டோலிவுட் ‘ஸ்டைலிஷ் ஸ்டார்' அல்லு அர்ஜுன், ‘KGF' புகழ் யாஷ் மற்றும் மலையாள சூப்பர் ஸ்டார் மோஹன் லால் ஆகியோரை பரிந்துரைத்துள்ளார்.

இதற்கிடையில், முன்னதாக ‘மெகா ஸ்டார்' சிரஞ்சீவி ‘சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்துக்கு இந்த சவாலை பரிந்துரைத்துள்ள நிலையில், விரைவில் ரஜினி ‘BetheREALMAN' வீடியோவை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com