முகப்புகோலிவுட்

தனுஷ் பீகார் செல்ல, அக்‌ஷய் மதுரை வர.., ‘அட்ராங்கி ரே’ பட புதிய அப்டேட்..!

  | February 13, 2020 10:42 IST
Dhanush

துனுக்குகள்

  • தனுஷின் 3-வது ஹிந்தி படத்துக்கு ‘அட்ராங்கி ரே’
  • இப்படத்தை ஆனந்த் எல். ராய் இயக்குகிறார்.
  • இப்படத்துக்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.

தனுஷின் மூன்றார்வது பாலிவுட் திரைப்படம் ‘அட்ராங்கி ரே' படப்பிடிப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் ஹிந்தி திரைப்படம் ‘அட்ராங்கி ரே' (Atrangi Re). இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை சாரா அலி கான் நடிக்கிறார். மேலும், ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் பாலிவுட் ஸ்டார் அக்‌ஷய் குமார் நடிக்கிறார். இப்படத்துக்கு ஏ. ஆர் ரகுமான் இசையமைக்கிறார்.

சமீபத்தில், சாரா அலி கானுக்கு தனுஷ் ஒருபுறம் அக்‌ஷய் மறுபுறம் முத்தம் கொடுக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியானது. அதையடுத்து, தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் இப்படம் குறித்து அதிகாரப்பூரவமான தகவலை வீடியோ பதிவாக வெளியிட்டார். மேலும், இப்படம் 2021-ஆம் ஆண்டின் காதலர் தினத்தன்று வெளியாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இப்படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது, 80 முதல் 90 நாட்களுக்குள் படமாக்க திட்டமிட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு, வரும் மார்ச் மாதம் துவங்கி ஜூலை மாதத்திற்குள் முடிக்க முடிவு செய்துள்ளனர். பீகார் மற்றும் மதுரையில் படமாக்கப்படவுள்ளது.

நடிகர் தனுஷ், ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் 'ராஞ்சனா' திரைப்படத்தின் மூலம் ஹிந்தியில் அறிமுகமானார். அதையடுத்து அமிதாப் பச்சனுடன் இணைந்து 'ஷமிதாப்' திரைப்படத்தில் நடித்தார். அதையடுத்து தனுஷுக்கு ‘அட்ராங்கி ரே' 3-வது ஹிந்தி படமாகும்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்