முகப்புகோலிவுட்

தனுஷ்-அனிருத் காம்போ “கம்மிங் சூன்”- #AskAnirudh

  | December 14, 2019 11:23 IST
Anirudh Ravichander

துனுக்குகள்

 • அனிருத்-தனுஷ் காம்போவில் ’why this Kolaveri' பாடல் உலகளவில் ஹிட்டானது.
 • 3, மாரி, வி.ஐ.பி,தங்கமகன் ஆகிய படங்கள் இவர்களின் காம்போவாகும்
 • தனுஷ் தற்போது பட்டாஸ் படத்தில் நடித்துவருகிறார்.
ரஜினியின் தர்பார் பட வெளியீட்டை முன்னிட்டு படத்தின் இசையமைப்பாளர் அனிருத் ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்கள் கேட்ட சுவாரசியமான கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் 'தர்பார்'. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்தின் ஆடியோ லான்ச் கடந்த 7-ஆம் தேதி நடைபெற்றது. வெளியான அனைத்து பாடல்களும் வைரல் ஹிட்டானது.
தர்பார் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத் நேற்று மாலை 5 மணி அளவில் ட்விட்டரில் #AskAnirudh என்ற இணைய உரையாடலில் ரசிகர்களுடன் கலந்து கொண்டார். அதில் ரசிகர்கள் கேட்ட பல சுவாரஸ்யமான கேள்விகளுக்கு அனிருத் பதில் அளித்துள்ளார். இதனால் டுவிட்டரில் #AskAnirudh என்ற ஹாஷ்டேக் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தையும் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
அப்போது ரசிகர் ஒருவர் “உங்களுக்கு பிடித்தது பாடுவதா அல்லது இசையமைப்பதா?” என்று கேட்டதற்கு அனிருத் “எனக்கு எனக்கு கம்போஸ் செய்வதும், இசையை தயாரிப்பதும் மிகவும் பிடிக்கும். பாடுவது என்பது என் வாழ்க்கையில் நடந்த எதிர்பாராத திருப்பம். அதனால் தான் எல்லோருக்கும் பாடி கொடுத்து வருகிறேன்” என்று கூறினார்.
அதையடுத்து, “தனுஷ் மற்றும் அனிருத் காம்போ வருமா வராதா தலைவா?” என்று ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அனிருத்  “coming soon” என்று பதிலளித்துள்ளார். மேலும், ரசிகர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு அவர் நேற்று பதிலளித்தார்.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com