முகப்புகோலிவுட்

செளந்தர்யா திருமணத்தில் இருந்து மேலும் ஒரு வைரல் வீடியோ - இம்முறை அனிருத் மற்றும் தணுஷ்

  | February 14, 2019 15:51 IST
Dhanush

துனுக்குகள்

 • தணுஷ் அசுரன் படத்தில் நடித்து வருகிறார்
 • இந்தியன் 2 படத்திற்கு இசையமைக்கிறார் அனிருத்
 • செளந்தர்யா – விசாகன் திருமணம் பிப்ரவரி 11 ஆம் தேதி பிரமாண்டமாக நடந்தது
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் இளைய மகளான செளந்தர்யா – விசாகன் திருமணம் பிப்ரவரி 11 ஆம் தேதி பிரமாண்டமாக நடந்தது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின், நடிகர் மற்றும் அரசியல்வாதியான கமல், பல கட்சி தலைவர்கள் ரஜினிகாந்த வீட்டு திருமணத்தில் கலந்து கொண்டனர். முகேஷ் அம்பானியும் இந்த திருமணத்தில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்த திருமணத்தில் ‘ஒருவன் ஒருவன் முதலாளி' பாட்டிற்கு ரஜினிகாந்த நடனமாடிய வீடியோ சமீபத்தில் வைரல் ஆனது. இந்நிலையில், இந்த திருமண நிகழ்வில் இருந்து மேலும் ஒரு வீடியோ வைரல் ஆகிறது.
அனிருத் மற்றும் தணுஷ் இணைந்து ‘கொலவெறி டி' பாட்டை பாடும் வீடியோ தான் அது.

செளந்தர்யாவின் அக்கா ஐஸ்வர்யா இயக்கி தணுஷ் கதாநாயகனாக நடிக்க அனிருத் இசையமைத்த படம் தான் 3. இந்த திரைபடத்தில் தான் கொலவெறி டி பாட்டு இடம்பெற்று அதிரிபுதிரி ஹிட் ஆனது.

கடைசியாக மாரி 2 படத்தில் கதாநாயகனாக தணுஷ் நடித்தார். தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் தணுஷ் நடித்து வருகிறார்.

அனிருத், ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்திற்கு இசையமைத்திருந்தார். தற்போது சங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்திற்கு இசையமைக்கிறார் அனிருத்.
 
 
 

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com