வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “அசுரன்”. இப்படம் அக்டோபர் 4ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்தை முடித்த தனுஷ் தற்போ கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிப்பதற்காக லண்டன் சென்றுள்ளார்.
இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஐஷ்வர்யா லட்சுமி நடிக்கிறார். ஜேம்ஸ் காஸ்மோ என்ற ஹாலிவுட் நடிகர் வில்லனாகஇணைந்திருக்கிறார். படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.
முன்னதாக இந்த படத்துக்கு எம்.ஜி.ஆர் பட தலைப்பான தலைப்பு 'உலகம் சுற்றும் வாலிபன்' என்று பெயர் வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் படக்குழு இதனை உறுதி செய்யவில்லை.
தலைப்பு தொடர்பாக , "இப்போது தான் படப்பிடிப்பே தொடங்கியுள்ளோம். இன்னும் தலைப்பை இறுதி செய்யவில்லை" என்று தெரிவித்தனராம். மேலும் ஒரே கட்டமாக லண்டனில் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டு, இந்தியா திரும்ப உள்ளார்களாம் படக்குழுவினர். விரைவில் படப்பிடிப்பை முடித்து விடவும் படக்குழு முடிவு செய்துள்ளதாம்.
தனுஷ் நடிப்பில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா' படம் விரைவில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை அடுத்து துரை செந்தில்குமார் இயக்கும் படத்தில் நடிக்கிறார் தனுஷ். எற்கனவே இப்படம் தொடங்கப்பட்டு காட்சிகள் படமாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.