முகப்புகோலிவுட்

‘கர்ணன்’ படப்பிடிப்பில் தனுஷ், மாரி செல்வராஜ்,.! BTS புகைபடத்தை வெளியிட்ட கதாநாயகி.!

  | September 12, 2020 23:59 IST
Dhanush

‘கர்ணன்’ திரைப்படம் 2021 பொங்கல் விடுமுறைக்கு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

2013ம் ஆண்டு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து அதன் பின்னர் கடந்த 2016ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'அனுராக கரிக்கின் வெள்ளம்' என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் தான் ரஜிஷா விஜயன். அவர் நடித்த அந்த முதல் படத்திலேயே கேரளா அரசு வழங்கும் சிறந்த நடிகைக்கான மாநில அரசு விருதை பெற்றார். மேலும் Film Fare விருதிற்கு அவர் தேர்வானார்.

ஜூன், பைனல்ஸ, ஸ்டாண்ட் அப் போன்ற படங்களில் நடித்து பிரபலமான இவர் தற்போது தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் கர்ணன் படத்தில் நடித்துள்ளார். எப்போதும் மாடர்ன் பெண்ணாக வளம் வரும் ரஜிஷா இந்த படத்தில் ஒரு அழகான கிராமத்து பெண்ணாக வளம் வருகிறார்.

இப்போது அவர் ‘கர்ணன்' படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட அரிய புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


இந்த சுவாரசியமான புகைப்படத்தில் தனுஷ், இயக்குநர் மாரி செல்வராஜ், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, காமெடி நாயகன் யோகி பாபு மற்றும் நடிகர் லால் ஆகியோர் மானிட்டரில், எடுக்கப்பட்ட காட்சிகளை ஆர்வமாக ப்ரிவியூ பார்த்துக்கொண்டு இருப்பதைக் காணலாம். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது, மேலும் தனுஷின் ரசிகர்களுக்கு இது மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.

‘கர்ணன்' திரைப்படம் 2021 பொங்கல் விடுமுறைக்கு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com