முகப்புகோலிவுட்

உலகத்துக்கே 144 போட்டாலும், ‘ரவுடி பேபி’க்கு தடை இல்லை..! 800 மில்லியன் வியூஸ்-னா சும்மாவா..?

  | March 23, 2020 16:19 IST
Rowdy Baby

800 மில்லியன் பார்வைகளைக் கடந்தும், 3 மில்லியன் லைக்குகளைப் பெற்றும் புதிய உச்சத்தை அடைந்துள்ளது.

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் - சாய் பல்லவி இணைந்து நடித்து 2018-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மாரி 2'. மேலும் இந்த படத்தில் டோவினோ தாமஸ், வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் யுவன் சங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைத்திருந்தார்.

இந்த திரைப்படத்தின் சிறப்பம்சமாக ‘ரவுடி பேபி' பாடல் இருக்கிறது. இந்த படத்தை மறந்தாலும், குழந்தைகள் முதல் பெரியவர் வரை பலரையும் இரங்கி ஆடவைத்த இந்த பாடலை யாரும் மறக்கமாட்டார்கள். இப்பாடல் ஏற்படுத்தியுள்ல தாக்கம் அப்படி.

பிரபு தேவா நடன இயக்கத்தில் தனுஷ் மற்றும் சாய் பல்லவியின் துள்ளலான ஆட்டம் ஒரு பக்கம், யுவன் சங்கர் ராஜா இசையில் தனுஷ் மற்றும் தீ-யின் குரலில் உலகமெங்கும் ஒலித்துக்கொண்டிருக்கும் இந்த பாடலுக்கு இன்னும் மவுசு குறையவில்லை. யூடியூபில் தற்போது இப்பாடல் புதிய சாதனையைப் படைத்துள்ளது. 800 மில்லியன் பார்வைகளைக் கடந்தும், 3 மில்லியன் லைக்குகளைப் பெற்றும் புதிய உச்சத்தை அடைந்துள்ளது. தனுஷ் ரசிகர்கள் இந்த சாதனையை சமூக ஊடகங்களில் கொண்டாடி வருகின்றனர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com