முகப்புகோலிவுட்

100 இல்ல, 150 கோடி...! ‘அசுரன்’ வேட்டையாடுறான்....

  | October 24, 2019 18:34 IST
Dhanush

துனுக்குகள்

 • அசுரன் 18 நாட்களில் ரூ.150 கோடி வசூலித்துள்ளது
 • வெற்றிமாரன் - தனுஷ் கூட்டணியில் அசுரன் 4-வது திரைப்படம்.
 • அசுரன் திரைப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ளார்.
தனுஷின் அசுரன் திரைப்படம் ரூ.150 கோடி வசூல் சாதனை படைத்து அசுரவேட்டையில் இறங்கியுள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி S.தாணுவின் V creations தயாரிப்பில் தனுஷ் நடித்து வெளியான ‘அசுரன்' திரைப்படம் சமீபத்தில் வெளியானது. அக்டோபர் 4-ஆம் தேதி திரைக்கு வந்த இப்படம், பஞ்சமி நில ஆக்கிரப்பை பற்றி கூறும் ‘வெக்கை' எனும் நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படமாகும். வெற்றிமாறனின் திரைக்கதையும், தனுஷின் உணர்வுபூர்வமான நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் பலதரப்பட்ட மக்களாலும் பாராட்டி பேசப்பட்டுவருகிறது.

‘அசுரன்' வெளியாகி 2 வாரங்களிலேயே பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்‌ஷனில் ரூ. 100 கோடி வசூலை எட்டிய பெருமையை பெற்றது. இந்நிலையில், 3-வது வாரம் முடியும் முன்னரே ரூ. 150 கோடி வசூலைக் கடந்து உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தனுஷ் ரசிகர்கள் இதனை #AsuranJoins150CrClub என்ற ஹாஷ்டேகுடன் சமூக வலைதளங்களில் கொண்டாடிவருகின்றனர்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com