முகப்புகோலிவுட்

ரத்தம் தெறிக்க வீச்சறுவாலுடன் புறப்பட்ட தனுஷ்; அசுரன் படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்ட தனுஷ்

  | April 29, 2019 20:00 IST
Asuran

துனுக்குகள்

  • வெற்றிமாறன் இப்படத்தை இயக்கி வருகிறார்
  • இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார்
  • கலைப்புலி எஸ்.தானு இப்படத்தை தயாரிக்கிறார்
‘வடசென்னை' படத்தைத் தொடர்ந்து வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் அசுரன். இப்படத்தை கலைப்புலி எஸ்.தானு தயாரிக்க ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்து வருகிறார்.
 
தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சுமா வாரியர் முதல் முறையாக தமிழில் இப்படம் மூலம் அறிமுகமாகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் இன்று தொடங்கியுள்ளதாக தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார்.
 
அதோடு அசுரன் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றையும் அவர் வெளியிட்டிருக்கிறார். இதில் வெள்ளை வேட்டி கட்டி, சட்டையில் ரத்தகரையோடு ஆக்ரோஷமாக இருக்கிறார் தனுஷ்.
 
விவசாயத்தை மைய்யப்படுத்தி உருவாகி வரும் இப்படத்தின் வேலைகள் முடிந்து விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வட்செனை' படத்தின் அடுத்த பாகம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்