முகப்புகோலிவுட்

மீண்டும் சிக்கலில் தனுஷின் “எனை நோக்கி பாயும் தோட்டா”!!

  | September 07, 2019 13:40 IST
Enai Noki Paayum Thota

துனுக்குகள்

 • கவுதம் மேனன் இப்படத்தை இயக்கி இருக்கிறார்
 • நேற்று இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது
 • விரைவில் இப்படத்தை வெளியிட பணிகள் நடைபெற்று வருகிறது
தனுஷ் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா'. இந்த படம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே படப்பிடிப்பை முடித்துவிட்ட நிலையில் பண நெருக்கடி காரணமாக வெளிவராமல் தாமதமாகி வந்தது. இந்நிலையில் இப்படம் நேற்று (6.09.2019) அன்று வெளியாகும் என்று அறிவித்தனர். இதனை முன்னிட்டு இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

பெரும் எதிர்பார்ப்பபுகளை ஏற்படுத்திய இப்படம் நேற்று வெளியாகும் என்று எதிர்ப்பார்த்த நிலையில் மீண்டும் இப்படம் வெளியவது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ள அறிக்கையில்,

“செப்டம்பர் 6-ந்தேதி வெளியாக இருந்த ‘எனை நோக்கி பாயும் தோட்டா' திரைப்படத்தை எங்களால் வெளியிட முடியவில்லை. பெருமுயற்சிகள் பல செய்து இத்திரைப்படத்தை வெளியிட முடியும் என்ற உறுதியோடு பணிபுரிந்த எங்களுக்கு இது பெரிய ஏமாற்றமாக உணர்ந்து வருந்துகிறோம். மிக விரைவில் அடுத்த சில தினங்களில் வெளியிட மேலும் உழைத்துக் கொண்டிருக்கிறோம். இது நீண்ட பெரும் பயணம் என்பதை நாங்கள் அறிவோம். மறுக்கவில்லை. இதில் ஏற்படும் தாமதத்தினால் ரசிகர்களுக்கு ஏற்படும் ஏமாற்றம், விரக்தியையும் அதன் காரணமாக நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களையும் நாங்கள் அறிவோம். ஆனால் இலக்கை எட்டும் நிலையில் நாங்கள் வேண்டுவது உங்கள் அன்பும் ஆதரவும்தான். இந்த திரைப்படத்தை திரையில் நீங்கள் பார்க்கும்போது உங்கள் காத்திருப்பை இந்த படம் நியாயம் செய்யும் என உளமாற நம்புகிறோம்.”
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com