முகப்புகோலிவுட்

தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ இசை உரிமையை பெற்ற முன்னணி நிறுவனம்.!

  | July 24, 2020 13:00 IST
Jagame Thandhiram

போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு இப்படம் வெளியீட்டுக்காக காத்திருக்கிறது.

தனுஷ் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனது ‘ஜகமே தந்திரம்' வெளியீட்டுக்காக காத்திருக்கிறார். ஜூலை 28-ஆம் தேதி அவரது பிறந்தநாள் என்பதால், அன்று காலை ஜகமே தந்திரம் திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘ரகிட ரகிட ரகிட' வெளியிடப்படவுள்ளது.

தனுஷின் பிறந்தநாளுக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில், ரகிட ரகிட ரகிட பாடலை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.

இந்நிலையில், இப்படத்தின் முக்கிய அப்டேட்டை கார்த்திக் சுப்பராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் இப்போது அறிவித்துள்ளார். அதாவது ‘ஜகமே தந்திரம்' திரைப்படத்தின் இசை உரிமையை முன்னணி நிறுவனமான ‘சோனி மியூசிக்' பெற்றுள்ளது. அதன்படி, இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் Sony Music South-ன் அதிகாரப்பூர்வ யூடியூப் தளத்தில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் ஐஸ்வரியா லெக்ஷ்மி, சஞ்சனா நடராஜன், ஜேம்ஸ் காஸ்மோ, ஜோஜு ஜார்ஜ், கலையரசன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தை ஒய் நாட் ஸ்டூடியோஸ் பேனரில் எஸ். சசிகாந்த் தயாரித்துள்ளார். சக்கரவர்த்தி ராமச்சந்திரன் இணைந்து தயாரிக்கிறார்.

இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இதில் ஷ்ரேயாஸ் கிருஷ்ணா கேமரா வேலைகளைக் கையாண்டிருக்க, விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு செய்கிறார். போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு இப்படம் வெளியீட்டுக்காக காத்திருக்கிறது.



    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com