முகப்புகோலிவுட்

OTT-யில் தனுஷின் ஜகமே தந்திரம்..? - பளிச் பதில் சொல்லி ட்வீட் போட்ட இயக்குநர்..!

  | August 27, 2020 12:42 IST
Karthick Subbaraj Tweet

துனுக்குகள்

 • உலகம் கொரோனா வைரஸுடன் போராடிக் கொண்டிருக்கிறது. மேலும், எல்லா நாடுகளிலும்
 • இந்த இக்கட்டான சூழலில் பல தயாரிப்பாளர்கள் இப்போது OTT வெளியீட்டைத்
 • இந்த படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தற்போது வெளியிட்டுள்ள ட்விட்
உலகம் கொரோனா வைரஸுடன் போராடிக் கொண்டிருக்கிறது. மேலும், எல்லா நாடுகளிலும் பொழுதுபோக்குத் தொழில்கள் இயங்கமுடியாமல் முடங்கிக் கிடக்கிறது. திரையரங்குகள் எப்போது திறக்கப்படும், மல்டிபிளக்ஸ்கள் எப்போது இயங்கும் என்று தெரியாத நிலை உள்ளது. அப்படி திறக்கப்பட்டாலும், பார்வையாளர்கள் அரங்குகளுக்கு வரத் துணிவார்களா என்பதும் நிச்சயமற்றது என்பது பலரின் அச்சம்.

இந்த இக்கட்டான சூழலில் பல தயாரிப்பாளர்கள் இப்போது OTT வெளியீட்டைத் தேர்வு செய்து வருகின்றனர். சமீபத்தில் ஜோதிகா நடித்த ‘பொன்மகள் வந்தாள்' மற்றும் கீர்த்தி சுரேஷின் 'பென்குயின்' மற்றும் மக்கள் செல்வி வரலட்சுமியின் 'டேனி' ஆகிய படங்கள் OTT தளத்தில் நேரடியாக ஸ்ட்ரீம் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள ஜகமே தந்திரம் படத்திற்கு நெட்ஃப்ளிக்ஸ் நேரடி வெளியீட்டிற்கு பெரும் தொகை வழங்கியுள்ளது என்றும் ஆனால் ரசிகர்களின் விருப்பம் கருதி திரைபடக்குழு அதை ஏற்க மருத்துவராகவும் தகவல் வெளியானது. ஆனால் தனுஷ் அவர்கள் இதை ஒரு தயாரிப்பாளர் தரப்பில் இருந்து சிந்தித்து OTT வெளியீட்டுக்கு வழிவகுக்க வேண்டும் என்று பலர் கூறிவருவதாகவும் தகவல் வெளியானது. 
இந்நிலையில் இந்த படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தற்போது வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் "ஜகம் சுகம் அடைந்தது.. வெள்ளித்திரையில் ஜகமே தந்திரம்" என்று குறிப்பிட்டு பரவிய எல்லா வதந்திகளுக்கு ஒரு முற்றுப்புள்ளியை வைத்துள்ளார்.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com