முகப்புகோலிவுட்

விஜய் சேதுபதியுடன் இணையும் தனுஷின் ‘கர்ணன்’ கதாநாயகி.?

  | August 05, 2020 11:06 IST
Rajisha Vijayan

ரஜிஷா தற்போது கர்ணன் படத்துடன் மேலும் இரண்டு மலையாளப் படங்களில் நடித்துவருகிறார்.

‘மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி பிரபல இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் என்பது பல மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டது. இப்படத்தில் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரனாக நடிக்கவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் முத்தையா முரளிதரன் 800-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியதால், இப்படத்திற்கு '800' தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைப்பதாகவும் கூறப்படுகிறது.

இப்போதைய, சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால், மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் ‘கர்ணன்' படத்தின் கதாநாயகியான ரஜிஷா விஜயன், விஜய் சேதுபதியுடன் ‘800' படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார் எனக் கூறப்படுகிறது. அதாவது, இப்படத்தில் நடிக்க அவரை படக்குழு அனுகியுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலுக்கு காத்திருப்போம்.

இதற்கிடையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது அடுத்த திரைப்படமான ‘மாஸ்டர்' வெளியீட்டிற்காக காத்திருக்கும் நடிகர் விஜய் சேதுபதி, துக்ளக் தர்பார், கடைசி விவாசாய், யாதும் ஊரே யாவரும் கேளீர் போன்ற பல படங்களிலும் மற்றும் பிற மொழிகளில் சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

அதேபோல், ரஜிஷாவும் கர்ணன் படத்துடன் மேலும் இரண்டு மலையாளப் படங்களில் நடித்துவருகிறார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com