ஹரிஷ் கல்யாண் அடுத்ததாக விஜய் தேவரகொண்டா நடித்த தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்கில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.
விஜய் தேவரகொண்டா, ரீது வர்மா நடிப்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான ரொமான்டிக் காமெடி தெலுங்குப் படம் 'பெல்லி சூப்புலு'. இப்படத்தை தருண் பாஸ்கர் இயக்கினார். இப்படத்தை கவுதம் வசுதேவ் மேனன் தயாரிக்க, அவரிடம் இணை இயக்குனராக இருந்த செந்தில் இயக்க தமிழில் ரீமேக் செய்யப்பட ஒப்பந்தம் போடப்பட்டது. 'பொன் ஒன்று கண்டேன்' என்று தலைப்பு வைக்கப்பட்ட இப்படத்தில் விஷ்ணு விஷால், தமன்னா இருவரும் நடிப்பதாக இருந்து பின் கைவிடப்பட்டது.
இந்நிலையில், தற்போது இப்படத்தின் ரீமேக் உரிமை கைமாறி, விஜய் தேவரகொண்டா கதாபாத்திரத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்கவுள்ளார். மேலும், இப்படத்தின் மூலம் ஹரிஷ் கல்யாணின் நீண்ட நாள் நண்பரான கார்த்திக் இயக்குனராக அறிமுகமாகிறார்.
இப்படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசை அமைக்க, கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹரிஷ் கல்யான் ‘விக்கி டோனர்' எனும் பாலிவுட் பட ரீமேக்கிலும் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்துக்கு ‘தாராள பிரபு' என்று தலைப்பும் வைக்கப்பட்டுள்ளது.