முகப்புகோலிவுட்

இளம் வயது விக்ரமாக துருவ்..! கேங்ஸ்டர் களத்தில் ‘விக்ரம்60’..?

  | June 06, 2020 15:41 IST
Vikram60

இப்படத்துக்கு அனிருத் இசையமைக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித் குமார் தயாரிக்கும் புதிய படத்திற்கு விக்ரமும் அவரது மகன் துருவ் விக்ரமும் கைகோர்க்கிறார்கள் என்ற தகவல் சமீப நாட்களாக கோலிவுட்டில் தீயாக பரவிவருகிறது. ‘விக்ரம் 60' எனக் கூறப்படும் இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளதாகவும், அதற்கு அனிருத் இசையமைக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

‘விக்ரம் 60' குழுவுக்கு நெருக்கமான வட்டாரங்கள், இது கமல் ஹாசனின் ‘நாயகன்' போன்ற ஒரு வகையான வயதான கதாபாத்திரத்தில் விக்ரம் ஒரு மாஸ் கேங்க்ஸ்டராக படமாக இருக்கும் என்று கூறுகின்றன. மேலும், விக்ரம் எப்படி ஒரு பயங்கரமான டான் ஆனார் என்பதைக் காட்டும் ஃப்லாஷ்பேக் காட்சிகள் இருக்கும் என்றும், அதில் இளம் வயது விக்ரமாக த்ருவ் விக்ரம் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.

இப்படம் மற்றும் அது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் வரை காத்திருக்கவேண்டும். ஆனால், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இப்படி ஒரு கதைகளத்தில் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடிப்பதைப் பார்க்க ரசிகர்கள் நீண்டகால ஆவலைக் கொண்டுள்ள நிலையில், இது குறித்த உண்மைத் தகவலுக்கான எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளன.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com