முகப்புகோலிவுட்

துருவ் விக்ரம் நடிக்கும் ' ஆதித்யா வர்மா' புதிய அப்டேட்....?

  | May 15, 2019 14:37 IST
Adithya Varma

துனுக்குகள்

  • தெலுங்கு படமான அர்ஜுன் ரெட்டி படம்தான் ஆதித்யா வர்மா
  • இப்படத்தை கிரிசய்யா இயக்குகிறார்
  • பனிதா சந்து இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்
கடந்த ஆண்ட தெலுங்கில் வெளியாகி  மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘அர்ஜுன் ரெட்டி' . இப்படத்தை இயக்குநர் பாலா தமிழில் இயக்கினார். இந்த படத்தில் விக்ரம் மகன் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு 'வர்மா' என்று தலைப்பிட்டிருந்தார் பாலா.

 
வர்மா படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாரான நிலையில்,  கருத்து வேறுபாடு காரனமாக இப்படம் கைவிடப்படுவதாக படக்குழு அறிவித்தது. இதையடுத்து ‘வர்மா' படத்தின் புதிய பதிப்பை அர்ஜுன் ரெட்டி இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்காவிடம் உதவியாளராக பணியாற்றிய கிரிசய்யா இயக்கியிருக்கிறார். ஆதித்யா வர்மா என்ற பெயரில் உருவாகி வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது.
 
இந்த படத்தில் துருவ் ஜோடியாக நடிப்பதன் மூலம் பாலிவுட் நடிகை பனிதா சந்து தமிழில் அறிமுகமாகிறார். மேலும் பிரியா ஆனந்த் மற்றும் புதுமுகங்கள் பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
 
படத்தின் பின்னணி வேலைகள் விரைவில் துவங்கவிருக்கும் நிலையில், படம் ஜூன் இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த படத்திற்கு ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்ய, ரதான்  இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்